- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

34 பாதிரியார்கள், 175 குழந்தைகளிடம் அத்துமீறி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல்
வடஅமெரிக்க நாடான மெக்சிகோவில் உள்ள ரோமன் கத்தோலிக்க சர்ச்சில், 1941ல் இருந்து பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்ததாக கூறப்பட்டுள்ள புகார் தொடர்பாக விசாரிக்கப்பட்டது. அதில், 175 குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளானது தெரியவந்துள்ளது. அந்த சர்ச்சை உருவாக்கிய மார்சியல் மேசியல் என்ற பாதிரியார் மட்டும், 60 குழந்தைகளிடம் அத்துமீறி நடந்துள்ளார். அவரைத் தவிர மேலும் 33 பாதிரியார்களும் இந்தக் கொடூரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல ஆண்டுகள் பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட பாதிரியார் மேசியலை, போப் பதினாறாம் பெனடிக், கடந்த 2006ம் ஆண்டு ஓய்வு பெற உத்தரவிட்டார். குற்றச்சாட்டுகளை எதிர் கொள்ளாமலேயே மேசியல் கடந்த 2008ம் ஆண்டு மறைந்தார்.