3 தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க டெல்லியில் ஆணையர்களுடன் தமிழக தேர்தல் அதிகாரி ஆலோசனை

அரவக்குறிச்சி,தஞ்சை,திருப்ப ரங்குன்றம் தொகுதிகளில் பண விநியோகத்தை தடுத்து,அமை தியான முறையில் தேர்தலை நடத் துவது தொடர்பாக,டெல்லியில் தேர்தல் ஆணையர்களுடன் நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் கடந்த மே மாதம் 16-ம் தேதி சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் நடந்தது. இதில்,வாக்காளர்களுக்கு அதிகளவு பணம் வழங்கப்பட்டதன் காரண மாகவும்,வருமான வரித்துறை சோதனையில் பணம் அதிகளவில் பிடிபட்டதாலும்,அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதிகளில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின் தேர்தல் ஆணையம் நேர்மையாக தேர்தலை நடத்த முடி யாது என்ற காரணத்தை தெரிவித்து தேர்தலை ரத்து செய்தது.

தொடர்ந்து,232 தொகுதிகளுக் கும் தேர்தல் நடந்து முடிந்த து. முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்,திருப்பரங்குன்றம் தொகுதியில் இருந்து தேர்வு செய் யப்பட்ட அதிமுகவின் சீனிவேலு மரணமடைந்தார். இதையடுத்து அத்தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்,அரவக்குறிச்சி,தஞ்சை,திருப்பரங்குன்றம் தொ குதிகளுக்கான இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி,நவம்பர் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. வேட்பு மனுத் தாக்கல் இம்மாதம் 26-ம் தேதி தொடங்குகிறது. இத்தேர்த லுக்கான ஏற்பாடுகளை தற்போது தமிழக தேர்தல் துறை செய்து வருகிறது. இத்தேர்தலிலும்,வருமான வரித்துறை,பறக்கும்ப டை,நிலையான கண்காணிப்புக் குழுவினர் தங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். தேர்தல் பார்வையாளர்கள் நவம்பர் 2-ம் தேதி தொகுதிகளுக்கு சென்று,கண்காணிப்பை தொடங்குகின் றனர். பிரதான கட்சிகளான அதிமுகவும்,திமுகவும்,கடந்த தேர்தலில் நிறுத்திய அதே வேட் பாளர்களை மீண்டும் அறிவித்துள் ளன. இவர்கள் மீண்டும் போட்டி யிட இதுவரை தேர்தல் ஆணையம் தடை விதிக்காத நிலையில்,கடந்த தேர்தல் போல் அல்லாமல்,இதில் பணப்பட்டுவாடாவை முழுமை யாக தடுக்கும் நடவடிக்கைகளில் தேர்தல் துறையினர் முழு மூச்சில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில்,தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி,கடந்த இரு தினங்க ளுக்கு முன் டெல்லி சென்றார். அங்கு தேர்தல் ஆணையரகத்தில் நடந்த மாநில தேர்தல் அதிகா ரிகளுடனான 2 நாள் கருத்தரங் கில் பங்கேற்றார். தொடர்ந்து,நேற்று,தமிழகத்தில் உள்ள 3 தொகுதிகளில் நடக்கும் தேர்தல் தொடர்பாக,தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி மற்றும் தேர்தல் ஆணையர்களுடன் விவாதித்தார். இதில்,பணப்பட்டு வாடாவை தடுப்பதற்கான நடவ டிக்கைகள்,காவல்துறை,துணை ராணுவப் படையினர் பயன்பாடு தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.