இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய வீரர் ஷர்துல் தாகூர் காயம் காரணமாக விலகல்

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இப்போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் விலகியுள்ளார்.

காயம் காரணமாக ஷர்துல் தாகூர் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இடம்பெறமாட்டார் என இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ள நிலையில் நாளை நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.