2022-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 2 மடங்கு உயர இலக்கு

2022-ம் ஆண்டிற்கு இந்திய பொருளாதாரத்தை இரண்டு மடங்கு அதிகரித்து 5 டிரில்லியன் டாலர் அளவிற்கு அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி பேசினார்.

புதுடில்லியில் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் (ஐ.ஐ.சி.சி) கண்காட்சி மைய தி்டட்டத்திற் கான அடிக்கல் நாட்டு வுிழா இன்று துவங்கியது. அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேசியதாவது:
ரூ. 26 ஆயிரம் கோடி மதிப்பில் இத்திட்டம் செயல்பட உள்ளது. 80 கோடி இளைஞர்களின் ஆற்றல் மற்றும் திறன்களை வளர்க்க இந்த மையம் அமையும். இது இந்தியாவின் சர்வதேச தொழில் மையமாகவும் விளங்கும்.ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நிதியகத்தின் புள்ளிவிவர ஆய்வின்படி தற்போது இந்தியா உலகின் 6-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக 2.6 டிரில்லியன் டாலர் அளவில் உள்ளது.

உற்பத்தி துறை மற்றும் வேளாண்துறையின் மூலம் 2022-ம் ஆண்டிற்கு இந்திய பொருளாதாரத்தை 2 மடங்கு அதிகரித்து 5 டிரில்லியன் டாலர் அளவிற்கு அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, தவுலா கவுன் என்ற இடத்தில் இருந்து துவாரகா வரையில் மெட்ரோ ரயிலில் பயணித்து விழா நடக்கும் இடத்திற்கு வந்தார்.