கட்டாய தடுப்பூசி: வேண்டும், வேண்டாம் என்பதற்கு உலகளவில் எழும் 3 வாதங்கள்

கட்டாய தடுப்பூசி: வேண்டும், வேண்டாம் என்பதற்கு உலகளவில் எழும் 3 வாதங்கள்

ஏற்கெனவே, உலகின் பல பகுதிகளில் பொது வாழ்க்கைக்கு கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியமாக உள்ளது. ஒரு பிரெஞ்சு மருத்துவராகவோ, நியூசிலாந்து ஆசிரியராகவோ அல்லது கனடாவின் அரசு ஊழியராகவோ இருந்தால், பணிக்குச் செல்ல கட்டாயமாகத் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். தடுப்பூசியை மறுக்கும் மக்களுக்கு இந்தோனீசியா, அரசு பலன்களை மறுக்கலாம். க்ரீஸ் நாடு, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியைக் கட்டாயமாக்குகிறது. பிப்ரவரி மாதத்திற்குள் அனைவருக்கும் கட்டாய தடுப்பூசி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த ஆஸ்திரியா தயாராக உள்ளது. ஆஸ்திரியர்களுக்கு தடுப்பூசி வலுக்கட்டாயமாகப் போடப்படும் என்று இதற்கு அர்த்தமில்லை. மருத்துவ மற்றும் மத விதிவிலக்குகள் இருக்கும். இருப்பினும், தடுப்பூசி போடாத பெரும்பகுதி மக்கள், அதை செலுத்திக் கொள்ளாமல் இருப்பதால் அபராதத்தை எதிர்கொள்கிறார்கள்….

Read More