கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களுக்கு விரைவில் விலக்கு

கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களுக்கு விரைவில் விலக்கு

பெங்களூரு: கர்நாடகத்தில் கோவில்களுக்கு அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விரைவில் விலக்கு அளிக்கப்படும் என்றும், இதுதொடர்பான சட்டம் சட்டசபை கூட்டுக்கூட்டத்தில் கொண்டுவரப்படும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். விரைவில் விலக்கு கர்நாடக பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் உப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் மேலிட பொறுப்பாளர் அருண்சிங், கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் உள்பட மந்திரிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசியதாவது:- பிற மதங்களின் வழிபாட்டு தலங்கள் சுதந்திரமாக செயல்படுகின்றன. ஆனால் இந்து கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. சில கட்டுப்பாடுகளால் தொந்தரவை அனுபவித்து வருகின்றன. அதனால் கர்நாடகத்தில் கோவில்களுக்கு…

Read More

மும்பையில் ஒரேநாளில் 1,377 பேருக்கு கொரோனா

மும்பையில் ஒரேநாளில் 1,377 பேருக்கு கொரோனா

மும்பையில் அதிகரிப்பு மராட்டியத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா வைரஸ் 2-வது அலை ஏற்பட்டு மக்களை ஆட்டிப்படைத்தது. அதன்பிறகு மாநிலத்தில் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்தது. நவம்பர் மாதம் முதல் மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,000-க்கும் குறைவாகவே இருந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மாநிலத்தில் தொற்று பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது. நேற்று மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சி அளித்தது. அதன்படி புதிதாக 2 ஆயிரத்து 172 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 22 பேர் பலியானார்கள். இதேபோல மாநில தலைநகர் மும்பையில் கொரோனா பாதிப்பு திடீரென எகிறி உள்ளது. இங்கு நேற்று ஒரேநாளில் 1,377 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது….

Read More

வியாபாரி வீட்டில் ரூ.257 கோடி பறிமுதல் – சமாஜ்வாதி கட்சியை சாடிய பிரதமர் மோடி

வியாபாரி வீட்டில் ரூ.257 கோடி பறிமுதல் – சமாஜ்வாதி கட்சியை சாடிய பிரதமர் மோடி

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில், வாசனைப் பொருட்கள் வியாபாரி பியூஷ் ஜெயின் வீட்டில் கடந்த வாரத்தில் வருமானவரித்துறை மற்றும் ஜிஎஸ்டி தலைமை இயக்குனரக அதிகாரிகள், ஜிஎஸ்டி புலானாய்வு துறை ஆகியவை இணைந்து ரெய்டு நடத்தினர். 120 மணி நேரம் நடைபெற்ற இந்த மெகா ரெய்டில் ரூ.257 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதோடு 16 ஆடம்பர சொத்துக்கள் குறித்த ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இதில் 2 சொத்துக்கள் துபாயில் இருப்பது தெரியவந்துள்ளது. இதோடு 23 கிலோ தங்கமும், 250 கிலோ வெள்ளியும் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து பியூஷ் ஜெயின் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில், வீட்டில் கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட பியூஷ் ஜெயின் சமாஜ்வாதி கட்சியுடன் தொடர்புடையவர் தகவல்…

Read More

பகலில் அரசியல் கட்சி பேரணி: இரவுநேர ஊரடங்கில் என்ன பயன்? வருண்காந்தி கேள்வி

பகலில் அரசியல் கட்சி பேரணி: இரவுநேர ஊரடங்கில் என்ன பயன்? வருண்காந்தி கேள்வி

ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் உத்தரபிரதேசத்தில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார். விரைவில் சட்டமன்ற தேர்தலை சந்திக்கவுள்ள அம்மாநிலத்தில் அரசியல் கட்சிகள் தொடர்ந்து பேரணிகளையும், பொதுக்கூட்டங்களையும் நடத்தி வருகின்றன. இதில் லட்சக்கணக்கானவர்கள் திரண்டு வருவதால் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து பா.ஜ.க. எம்.பி. வருண்காந்தி கூறுகையில், ‘பகல் நேரத்தில் நடைபெறும் அரசியல் கட்சி பேரணியில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடுகிறார்கள். அதே சமயம் இரவுநேர ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் என்ன பயன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Read More

காசி விஸ்வநாதர் கோவில் தமிழ் டிரஸ்ட்டியுடன் நேர்காணல் !!

காசி விஸ்வநாதர் கோவில் தமிழ் டிரஸ்ட்டியுடன் நேர்காணல் !!

காசி விஸ்வநாதர் கோவில் காரிடார்பற்றிய புது தகவல்கள் !! தற்சமயம் அமைந்துள்ள கோவில் வல்லஹத்தின் முக்கியத்துவம் !! காசி விஸ்வநாதர் – அன்னபூரணா தேவியின் மகிமை !! கிளிக் செய்து கோவிலின் முதல் தமிழ் டிரஸ்டி ஸ்ரீ வெங்கட்ராமன கனபாடிகளிடமிருந்து கேட்டு கண்டு … அனைவரோடும் பகிரவும்

Read More

ஒமைக்ரான்: நாம் எச்சரிக்கை, விழிப்புடன் இருக்கவேண்டும் – பிரதமர் மோடி

ஒமைக்ரான்: நாம் எச்சரிக்கை, விழிப்புடன் இருக்கவேண்டும் – பிரதமர் மோடி

இந்தியாவிலும் கடந்த 2-ந்தேதி நுழைந்த ஒமைக்ரான் வைரஸ் நாடு முழுவதும் தற்போது 300-க்கும் அதிகமானோருக்கு பரவியுள்ளது. டெல்டா வைரசை விட 3 மடங்கு வேகமாக பரவக்கூடியது என்பதால் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. இந்நிலையில், ஒமைக்ரான் தொற்று பரவலை தடுப்பதற்கான வழிவகைகள் குறித்து பிரதமர் மோடி சுகாதார நிபுணர்களுடன் நேற்று இரவு முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாநில அரசுடன் இணைந்து பணியாற்றவும், மாநில அரசின் செயல்திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கவும் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார். கொரோனா தொற்றுக்கு எதிராக போராட…

Read More

ஒமைக்ரான் பரவல்: மீண்டும் கட்டுப்பாடுகள் வருமா? – பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை

ஒமைக்ரான் பரவல்: மீண்டும் கட்டுப்பாடுகள் வருமா? – பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை

உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் கடந்த மாதம் 24-ந்தேதி தென் ஆப்பிரிக்காவில்தான் முதலில் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தன. ஆனாலும் ஒருமாத காலத்தில் இந்த வைரஸ் 106 நாடுகளில் கால்பதித்துவிட்டது என உலக சுகாதார அமைப்பு உறுதி செய்திருக்கிறது. இந்தியாவிலும் கடந்த 2-ந்தேதி நுழைந்த இந்த வைரஸ் 20 நாளில் 227 பேருக்கு பாதித்துள்ளது. டெல்டா வைரசை விட குறைந்தது 3 மடங்கு வேகமாக பரவக்கூடியது என்பதால் இந்த வைரஸ் பரவலைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுகளையும், யூனியன் பிரதேச நிர்வாகங்களையும் உஷார்படுத்தி மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதி உள்ளார். இந்த…

Read More

நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல்: பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை

நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல்: பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வகை தொற்று வெளிநாடுகளிலிருந்து திரும்பும் பயணிகள் மூலம் இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை  வெளியிட்ட அறிவிப்பில், ஒமைக்ரான் வகை தொற்றால் இந்தியாவில் 213 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 90 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தொடர்ந்து 123 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மராட்டியத்தில் 57, டெல்லியில் 54 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தெலுங்கானா 20, கர்நாடகம் 19, ராஜஸ்தான் 18, கேரளம் 15, குஜராத் 14, ஜம்மு – காஷ்மீர் 3, ஒடிசா 2, உத்தரப் பிரதேசம் 2, ஆந்திரம், சண்டிகர், தமிழகம், லடாக், மேற்கு வங்கத்தில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது….

Read More

தமிழகத்தில் இன்று 602 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் இன்று 602 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,00,342 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 602 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 27,41,013 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 691 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,97,244 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் இன்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36,691 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 7,078 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை…

Read More

ரஜினியின் புதிய பட இயக்குனர் முடிவானதா?

ரஜினியின் புதிய பட இயக்குனர் முடிவானதா?

அண்ணாத்த படம் திரைக்கு வந்த நிலையில் ரஜினிகாந்துக்கு லேசான உடல்நல குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வரும் அவர் அடுத்த படத்தில் நடிக்க தயாராகிறார். ரஜினியின் புதிய படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏற்கனவே கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை அழைத்து பேசினார். இதனால் ரஜினியின் புதிய படத்தை அவர் இயக்கலாம் என்று கூறப்பட்டது. மேலும் சில இயக்குனர்களையும் அழைத்து ரஜினி கதை கேட்டதாக தகவல் வெளியானது. தேசிங்கு பெரியசாமியுடன் டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார், ரஜினியின் பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், படையப்பா, லிங்கா…

Read More
1 2 3