உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: 40 % பெண்களுக்கு வாய்ப்பு -பிரியங்கா காந்தி உறுதி

உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: 40 % பெண்களுக்கு வாய்ப்பு -பிரியங்கா காந்தி உறுதி

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 40 சதவீத தொகுதிகளில் பெண்கள் போட்டியிட வாய்ப்பளிக்க  காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சி நடைபெற்று வரும் உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற  காங்கிரஸ் கட்சி தற்போதே வியூகம் வகுத்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின்  பொதுச்செயலாளர்களில் ஒருவரான  பிரியங்கா காந்தி  இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 400 தொகுதிகளில் 40 சதவீத இடங்களில் பெண்கள் போட்டியிட வாய்ப்பளிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது” என்றார்.

Read More