இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது!

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது!

இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் 2019ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததால், இது சட்டமாக உடனடியாக நடைமுறைக்கு வந்தது. இந்திய குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்திய நிலையில், தமிழகத்தை சேர்ந்த திமுக உள்பட பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தசூழலில் சட்டமன்றத்தில் இன்று பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன், ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நலத் துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது இந்நிலையில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை சட்டசபையில்…

Read More

சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பையனூர் பங்களா முடக்கம்; வருமான வரித்துறை அதிரடி..!!

சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பையனூர் பங்களா முடக்கம்; வருமான வரித்துறை அதிரடி..!!

சென்னையை அடுத்த பையனூரில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பங்களா முடக்கப்பட்டிருக்கிறது. 2017-ஆம் ஆண்டு  சசிகலா, ஜெயலலிதாவுக்கு சொந்தமான 157 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. சோதனையின் போது பினாமி சொத்துக்கள் என வகைப்படுத்தப்பட்ட சொத்துக்களை கைப்பற்ற வருமான வரித்துறை முடிவு செய்தது. அதன்படி சென்னையை அடுத்த பையனூரில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பங்களா முடக்கப்பட்டிருக்கிறது.. சொத்துக்களை முடக்கியுள்ள அதிகாரிகள், அங்கு நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். கடந்த 2019-ல் பினாமி சட்டத்தின்கீழ் சசிகலா தொடர்புடைய ரூ.1,600 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டது. அதேபோல், 2020-ஆம் ஆண்டு, கோடநாடு தேயிலை எஸ்டேட், சிறுதாவூர் உட்பட 65 சொத்துக்கள் முடக்கப்பட்டிருந்தது…

Read More