பள்ளி, கல்லூரிகளில் முழு கண்காணிப்பு – பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு

பள்ளி, கல்லூரிகளில் முழு கண்காணிப்பு – பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கடந்த 1 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. பள்ளிகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக பின்பற்றப்பட்டு வரும் நிலையில், சில இடங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளில் சுகாதாரத்துறையினர் முழு கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். மாணவர்கள் குழுவாக இருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், அவர்கள் வந்து செல்வதற்கு தனித்தனி…

Read More

நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு!

நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு!

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நடப்பு ஆண்டு நீட் தேர்வு எழுத நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தமிழகத்தை பொறுத்தவரையில், கடந்த ஆண்டை விட குறைவாக ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 890 பேர் மட்டுமே விண்ணப்பித்து இருந்தனர். கடந்த ஆண்டு 155 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த ஆண்டு 198 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே அறிவித்தபடி வருகிற 12-ந் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. நேற்று இரவு நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை…

Read More