தமிழகத்தில் மேலும் 1,562 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் மேலும் 1,562 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் இன்று  புதிதாக 1 லட்சத்து 60 ஆயிரத்து 523 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.   அதில் 1,562  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 4 கோடியே 26  லட்சத்து 33 ஆயிரத்து 164  பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் இன்று கொரோனாவுக்கு  20 பேர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளனர்.  தமிழகத்தில் இதுவரை 34 ஆயிரத்து 961  பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.  கொரோனா பாதிப்பில் இருந்து  1,684  பேர் இன்று  ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 25 லட்சத்து…

Read More

சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை – தளர்வுகள் அறிவிப்பு

சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை – தளர்வுகள் அறிவிப்பு

கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து மின்சார ரெயிலில்அத்தியாவசிய பணியாளர்கள், பெண்கள், 12 வயது உட்பட்டோர் அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆண் பயணிகள் மட்டும் காலை 7.30 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7.30 மணி வரையும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெற்கு ரயில்வே கட்டுப்பாடு விதித்து இருந்தநிலையில், ஆண் பயணிகளும் அனைத்து நேரமும் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Read More