இந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறி சாதனை

இந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறி சாதனை

டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கியில் காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி, முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதில் பெண்கள் ஹாக்கி காலிறுதிப்போட்டியில் இந்திய அணி, மூன்று முறை தங்கம் வென்ற ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இதில், சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனைகள், ஆட்டநேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதிப்பெறுவது இதுவே முதன்முறையாகும். அரையிறுதியில் அர்ஜென்டினா உடன் மோதுகிறது.

Read More

நடப்பு மாதத்தில் 3வது அலை: ஐஐடி வல்லுநர்கள் எச்சரிக்கை

நடப்பு மாதத்தில் 3வது அலை: ஐஐடி வல்லுநர்கள் எச்சரிக்கை

பஇந்தியாவில் நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் கோவிட் 3வது அலை தொடங்க வாய்ப்புள்ளது. தினமும் ஒரு லட்சம் பேருக்கு குறையாமல் பாதிக்கப்படுவர்; அதிகபட்சமாக 1.50 லட்சம் வரை பாதிக்கப்படலாம்’ என, ஐஐடி வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். ஐதராபாத் ஐஐடி ஆய்வாளர்கள் மதுகுமளி வித்யாசாகர், கான்பூர் ஐஐடி ஆய்வாளர் மனிந்திரா அகர்வால் இருவரும் கணித முறை அடிப்படையில், கோவிட் 3வது அலையை கணித்துள்ளனர். இதுகுறித்து ஆய்வாளர் மதுகுமளி வித்யாசாகர் கூறுகையில், ‘கேரளா, மஹாராஷ்டிராவில் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதைப் பார்க்கும்போது, 3வது அலை நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் வருவதற்கான சாத்தியங்கள் உள்ளன. அவ்வாறு ஏற்பட்டால் அக்டோபரில் உச்சத்தை அடையும். ஆனால், 2வது அலையைப் போல், 3வது அலையில் பாதிப்பு, உயிரிழப்பு…

Read More