ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேற்றம் – தலிபான்கள் கொண்டாட்டம்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேற்றம் – தலிபான்கள் கொண்டாட்டம்

கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க வீரர்களின் கடைசி அணி காபூல் விமானநிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்டது. . இங்கிலாந்தும்.  அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானில் தங்கள் இராணுவத்தை அதிகாரப்பூர்வமாக நேற்றிரவு காபூல் விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றின. அமெரிக்க பாதுகாப்பு துறை வெளியிட்ட செய்தியில், காபூலில் அமெரிக்க படைகளின் நடவடிக்கை முடிந்ததன் அடையாளமாக, கடைசி அமெரிக்க வீரராக மேஜர் ஜெனரல் கிறிஸ் டோனாஹியூ நேற்று சி-17 ரக விமானம் ஒன்றில் புறப்பட்டு உள்ளார் என தெரிவித்தது. அவர் ஆயுதங்களுடன், ராணுவ சீருடை அணிந்து வெளியேறும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு இருந்தது. இதை தொடர்ந்து தலீபான்கள்  விமான நிலையத்திற்குள் நுழைந்து பல இராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் அமெரிக்காவால்…

Read More

சுப்ரீம் கோர்ட்: முதல் முறையாக ஒரே நாளில் 9 நீதிபதிகள் பதவி ஏற்பு இந்தியாவில்

சுப்ரீம் கோர்ட்: முதல் முறையாக ஒரே நாளில் 9 நீதிபதிகள் பதவி ஏற்பு இந்தியாவில்

சுப்ரீம் கோர்ட்டில் நியமிக்கப்பட்டுள்ள மூன்று பெண் நீதிபதிகள் உட்பட 9 புதிய நீதிபதிகளும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். உச்ச நீதிமன்றத்துக்கு அதிகப்பட்சமாக 34 நீதிபதிகளை நியமிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த முழு எண்ணிக்கையிலான நீதிபதிகள் நியமிக்கப்படாமல் இருக்கிறது. இந்த மாதத்தில் அடுத்தடுத்து மூத்த நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமனும், நவீன் சின்காவும் ஓய்வு பெற்றதால், 26 ஆக இருந்த நீதிபதிகளின் எண்ணிக்கை 24 ஆக குறைந்தது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டுக்கு புதிதாக 9 நீதிபதிகளை நியமிக்கும்படி, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிசியம் கடந்த 17ம் தேதி ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்தது. சுப்ரீம் கோர்ட்டுக்கு நீதிபதிகளாக நியமிப்பதற்கு தெலுங்கானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி…

Read More

ஞாயிற்றுக் கிழமைகளில் கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை- தமிழக அரசு

ஞாயிற்றுக் கிழமைகளில் கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை- தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு விதித்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் செப்டம்பர்  15 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.   இது குறித்த முக்கிய விவரங்களை காணலாம். *தமிழகத்தில் திட்டமிட்டபடி  செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள்,கல்லூரிகள் திறக்கப்படும். *ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கடற்கரைகளிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை. *வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மத வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி ரத்து தொடரும் *கல்லூரி மாணவர்களுக்கான…

Read More

டோக்கியோ பாரா ஒலிம்பிக்: இந்தியாவுக்கு 2-வது தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக்: இந்தியாவுக்கு 2-வது தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக்  ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அண்டில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதுடன் 68.55 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து உலக சாதனையும் சுமித் அண்டில் படைத்தார். டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியா வெல்லும் 2-வது தங்கம் இதுவாகும்.  23 வயதாகும் சுமித் அண்டில் அரியானா மாநிலம் சோனிபட் பகுதியை சேர்ந்தவர். 2005  ஆம் ஆண்டு நேரிட்ட பைக் விபத்தில் இடது முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதியை இழந்தவர் சுமித் அண்டில்.

Read More

தமிழக கவர்னர் பன்வாரிலாலுக்கு கூடுதல் பொறுப்பு

தமிழக கவர்னர் பன்வாரிலாலுக்கு கூடுதல் பொறுப்பு

கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் தமிழக ஆளுநராக உள்ள பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் ஆலுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். மேலும் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

தமிழகத்தில் 1,542 பேருக்கு கொரோனா: 16-வது நாளாக பாதிப்பு குறைவு

தமிழகத்தில் 1,542 பேருக்கு கொரோனா: 16-வது நாளாக பாதிப்பு குறைவு

தமிழகத்தில் கடந்த 11-ந் தேதி 1,964 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடந்து தமிழகத்தில் பாதிப்பு குறைந்த வண்ணமே இருந்தது. அந்த வகையில் 15-வது நாளாக 1,542-பேருக்கு கொரோனா தாக்கம் இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் இன்று புதிதாக 1 லட்சத்து 62 ஆயிரத்து 487 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,542 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 21 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து இன்று 1,793-பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை17,797 ஆக உள்ளது.

Read More

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 10 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்: சட்டசபையில் அறிவிப்பு

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 10 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்: சட்டசபையில் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டசபையில் இன்று உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதில் உயர்கல்வித்துறை மானிய கோரிக்கையின்போது பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் புதிதாக 10 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று கூறினார். இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் பேசிய அமைச்சர் பொன்முடி, “திருச்சுழி, திருக்கோவிலூர், ஏரியூர், ஒட்டன்சத்திரம், தாராபுரம், ஆலங்குடி, கூத்தாநல்லூர், சேர்காடு, தாளவாடி, மானூர் ஆகிய 10 இடங்களில் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளது. செங்கல்பட்டு, சேலம், கோவை, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், கும்பகோணம், நந்தனம், திருப்பூர் அரசு கலைக் கல்லூரிகளில் ஆராய்ச்சிப் பாடப் பிரிவு தொடங்கப்பட உள்ளது. மேலும், வெவ்வேறு…

Read More

கேரளாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 30,007 பேருக்கு தொற்று

கேரளாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 30,007 பேருக்கு தொற்று

கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று தொடர்ந்து இரண்டாவது நாளாக, 30,007 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1,81,209 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மேலும் 18,997 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 37,11,625 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 162 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 20,134 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,66,397 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும்…

Read More

அமெரிக்காவில் வனப்பகுதியில் 10 நாட்களாக தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத் தீ

அமெரிக்காவில் வனப்பகுதியில் 10 நாட்களாக தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத் தீ

மெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள எல்டொரோடா வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயால் அப்பகுதி மக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை சூழ்ந்து இருப்பதால் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை சுமார் 1 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி தீயால் கருகி உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத் தீயால்  சுமார் 42,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.

Read More

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 60 கோடியை தாண்டியது

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 60 கோடியை தாண்டியது

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 59 கோடியைக் கடந்தது. மொத்தம் 65,52,748 முகாம்களில் 59,55,04,593 தடுப்பூசிகள் போடப்பட்டு இருந்தன. இந்தநிலையில் இன்று 60 கோடி என்ற எண்ணிக்கையை கடந்ததாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “ இந்தியா நிர்வாகம்: 85 நாட்களில் 10 கோடி டோஸ், 45 நாட்களில் 20 கோடி டோஸ், 29 நாட்களில் 30 கோடி டோஸ், 24 நாட்களில் 40 கோடி, 20 நாட்களில் 50 கோடி. இப்போது, 60 கோடி தடுப்பூசியை முடிக்க 19 நாட்கள் ஆனது” என்று மாண்டவியா பதிவிட்டுள்ளார். நம்…

Read More
1 2 3 5