இங்கிலாந்தில் ஒரேநாளில் 42,302 பேருக்கு கொரோனா பாதிப்பு

இங்கிலாந்தில் ஒரேநாளில் 42,302 பேருக்கு கொரோனா பாதிப்பு

இங்கிலாந்தில் அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா பரவலால் பாதிப்புகள் நாளுக்குநாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி 15ஆம் தேதிக்கு பிறகு அதிகபட்ச அளவாக ஒரேநாளில் புதிதாக 42,302 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 52,33,207 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 530 ஆக உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 43 லட்சத்து 74 ஆயிரத்து 314 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 7,30,363 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு…

Read More

பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு சீன என்ஜினீயர் – சீன வீரர்கள் உள்பட 10 பேர் பலி

பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு சீன என்ஜினீயர் – சீன வீரர்கள் உள்பட 10 பேர் பலி

வடகிழக்கு பாகிஸ்தானில் கைபர் பக்துன்வா மாகாணம் கொகிஸ்தான் பகுதியில் தாசு நீர் மின் நிலையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக பெர்சீம் முகாமில் இருந்து இன்று காலை ஒரு பஸ்சில் சீன என்ஜினீயர்கள், சீன வீரர்கள் மற்றும் தொழிலாளர்கள் 30 பேர் பயணம் செய்து கொண்டு இருந்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் சீன என்ஜினீயர் மற்றும் சீன வீரர்கள் உள்பட 10 பேர் பலியானர்கள். பலர் காயம் அடைந்துள்ளனர் அவர்கள் தாசு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களின் பலரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையில், சீன நாட்டினர்…

Read More