உபி தேர்தல் உண்மை நிலவரம் – தேர்தல் கவரேஜ்

உபி தேர்தல் உண்மை நிலவரம் – தேர்தல் கவரேஜ்

உபி தேர்தல் உண்மை நிலவரம் – பாரத் மார்க் உத்திரப்பிரதேசம் முழுவதிலுமிருந்து மக்கள் மண துடிப்பை உங்களுக்காக ஒரு சிறப்பு தேர்தல் கவரேஜ் கொண்டு வருகிறோம் !! மிக பெரிய பெரும்பான்மை பெற்று பிஜேபி யின் ” உ பி யின் முதல்வர் யோகி ” மீண்டும் வரும் தேர்தலில் வெல்வாரா ? உபி யாரைத் தேர்ந்தெடுக்கும்? பாரத் மார்க் யூடியூப் சேனலை சப்சிகிரைப் செய்து உபி மக்களின் துடிப்பை இப்போது அறிந்து கொள்ளுங்கள் 👉 https://www.youtube.com/bharatmarg 👈 எங்கள் வேலையை ஆதரித்து நன்கொடை அளித்து “உபி தேர்தல் உண்மை நிலவரம்” நிகழ்சியில் உங்கள் கேள்விகளை கேட்கவும் இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 https://bharatmarg.com/donate-now/…

Read More

டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் குத்து சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை வெற்றி; பதக்கம் உறுதி

டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் குத்து சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை வெற்றி; பதக்கம் உறுதி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் மகளிர் குத்து சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெற்றி பெற்று பதக்கம் உறுதி செய்துள்ளார். டோக்கியோ, 32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8வது நாளான மகளிர் வெல்டர்வெயிட் குத்து சண்டை காலிறுதியில் 64-69 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெயின் மற்றும் சீன தைபேவின் சின்-சென் நியென் விளையாடினர். இந்த போட்டியில் லவ்லினா 4-1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றுள்ளார். காலிறுதியில் வெற்றியடைந்து முன்னேறியுள்ள லவ்லினா இந்தியாவுக்கு பதக்கம் ஒன்றை உறுதி செய்துள்ளார்.

Read More

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை: தமிழக அரசு

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை: தமிழக அரசு

தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாததால் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கோவிட் பரவல் 2வது அலையின் போது ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது. இதனையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனால், அங்குள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த மே மாதம் முதல் ஆக்சிஜன் உற்பத்தி துவங்கியது. இங்கு உற்பத்தியாகும் மருத்துவப் பயன்பாட்டுக்கான திரவ மற்றும் வாயு ஆக்சிஜன் தமிழகம் முழுவதும் தொடர்ந்து அனுப்பப்பட்டது. ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்ச நீதிமன்றம்…

Read More

இந்திய ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க குழு

இந்திய ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க குழு

இந்திய ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள, கோவை மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களை மீட்க, குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்குச் சொந்தமாக நன்செய், புண்செய் நிலங்கள் மட்டுமின்றி வர்த்தக கட்டடங்கள், வீடுகள், மனையிடங்கள் உள்ளன. வாடகை அடிப்படையில் பயன்படுத்தி வரும் குத்தகைதாரர்கள், நியாயமான வாடகை செலுத்தாமல் காலம் கடத்தி வருகின்றனர். பலர் ஆக்கிரமிப்பும் செய்துள்ளனர்.ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பதற்காக, மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் செந்தில்வேலவன், உதவி கமிஷனர்கள் தலைமையில் மூன்று குழுக்கள் உருவாக்கியுள்ளார். இத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ஆக்கிரமிப்பாளர்கள் பலரும் இதுவரை அதிகாரிகளை சரிக்கட்டியும், அரசியல்வாதிகளை பயன்படுத்தி சமாளித்து வந்தனர். ஆக்கிரமிப்பு…

Read More

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தோல்விக்குக் காரணமான 3 விஷயங்கள்’ சீண்டும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தோல்விக்குக் காரணமான 3 விஷயங்கள்’  சீண்டும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள்

சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வியடைந்ததற்கு கட்சிக்காரர்கள் யாரும் வருத்தப்படவில்லை’ என அக்கட்சியின் மூத்த நிர்வாகி பேசியுள்ளது, அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடக்கிறது அ.தி.மு.கவில்? தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க அடைந்த தோல்விக்குப் பிறகு அக்கட்சியின் நிர்வாகிகள் பலரும் பல்வேறு கருத்துகளைக் கூறி வருகின்றனர். அந்த வரிசையில் 7ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் வானூரில் நடந்த அ.தி.மு.க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்துகள், பா.ஜ.கவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தின. அ.தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் பேசிய சி.வி.சண்முகம், “பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்த காரணத்தால் சிறுபான்மையினர் வாக்குகளை முழுமையாக இழந்தோம். கடந்த 10 ஆண்டுகளாக நல்ல திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சென்ற காரணத்தால் நமக்கு நல்ல…

Read More

ஈராக்கில் அமெரிக்காவின் போர் நடவடிக்கை இந்த ஆண்டு இறுதியில் நிறைவு – ஜனாதிபதி ஜோ பைடன்

ஈராக்கில் அமெரிக்காவின் போர் நடவடிக்கை இந்த ஆண்டு இறுதியில் நிறைவு – ஜனாதிபதி ஜோ பைடன்

ஐ.எஸ். பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிடுவதற்காக அமெரிக்கா கடந்த 2014-ம் ஆண்டு ஈராக் நாட்டுக்கு தனது படைகளை அனுப்பியது. அமெரிக்க படைகளின் உதவியுடன் ஈராக் ராணுவம் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை கட்டுக்குள் கொண்டுவந்தது. ஐ.எஸ். பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதாக கடந்த 2017-ம் ஆண்டு‌ ஈராக் அறிவித்தது. இருப்பினும் அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் இன்னமும் தொடரும் நிலையில் அவர்களை எதிர்த்து சண்டையிட அமெரிக்க படைகள் ஈராக்கில் தொடர்ந்து முகாமிட்டுள்ளன.இதற்கிடையில் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் ஈராக்கில் இருக்கும் அமெரிக்க படைகளை குறிவைத்து தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் அமெரிக்கா தனது படைகளை திரும்ப பெற வேண்டும் என ஈராக் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.இந்த…

Read More

கேரளாவில் கையை மீறிவிட்டதா கோவிட் பாதிப்பு?

கேரளாவில் கையை மீறிவிட்டதா கோவிட் பாதிப்பு?

இந்திய நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கோவிட் 2வது அலையின் தாக்கம் குறைந்து தொற்று எண்ணிக்கை இரண்டு இலக்கத்தில் உள்ளது. ஆனால், கேரளாவில் மட்டும் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் 10 ஆயிரத்துக்கும் குறைவில்லாமல் தொற்று பாதிப்பு பதிவாகிறது. இதனால் கேரளாவில் கோவிட் தொற்றுப் பரவல், அரசின் கையை மீறிச் சென்றுவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியின் துணைக் கண்காணிப்பாளர் மருத்துவர் சந்தோஷ் குமார் தெரிவித்து உள்ளதாவது:கேரளாவில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 21 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டு உள்ளனர். இது தேசிய சராசரியில் 9.9 சதவீதமாகும். மற்ற எந்த மாநிலத்தையும்விட இது…

Read More

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டால் 3 ஆண்டு காலம் பயண தடை – சவுதி அரேபியா

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டால் 3 ஆண்டு காலம் பயண தடை – சவுதி அரேபியா

கொரோனா அச்சுறுத்தலால் பல நாடுகள் தங்களுடைய சர்வதேச விமான சேவைக்கு தற்காலிக தடை விதித்துள்ளன. சரக்கு விமானம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான விமான போக்குவரத்து தவிர பயணிகள் விமானங்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. சில நாடுகள் கடுமையாக்கியும் உள்ளன. அவற்றில் கொரோனா பாதிப்புகள் அதிகளவில் காணப்படும் நாடுகளில் இருந்து வருவோர், கொரோனா தடுப்பூசி செலுத்திய விவரம், கொரோனா பாதிப்பில்லா சான்றிதழ் ஆகியவற்றை உடன் கொண்டு வருவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், சவுதி அரேபிய அரசு கொரோனா பாதிப்புகள் அதிகளவிலுள்ள நாடுகளை ரெட் லிஸ்ட் எனப்படும் பட்டியலில் வகைப்படுத்தி உள்ளது. அவற்றில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பிரேசில், அமீரகம், எகிப்து உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன….

Read More

தமிழகத்தில் போலி சமூக நீதி !!

தமிழகத்தில் போலி சமூக நீதி !!

தமிழகத்தில் போலி சமூக நீதி பேசுவதாக கூறியுள்ள தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, இணை அமைச்சர் எல்.முருகனுக்கு பிரதிநிதித்துவம் கொடுத்து அவர் சமூகத்தை பா.ஜ., முன்னேற்றி இருப்பதாகவும், திமுக.,வில் இதுபோல் இல்லாமல் சிலரை வளர விடுவதில்லை எனவும் கூறியுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில் அப்துல் கலாம் நினைவு தினத்தையொட்டி அவரது படத்திற்கு பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அப்துல்கலாம் தமிழகத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்தவர்; விஞ்ஞானத்திற்கு பலம் சேர்த்தவர். அவர் இரண்டாவது முறையாக ஜனாதிபதி ஆவதை திமுக தடுத்துவிட்டது. அ.தி.மு.க – பா.ஜ., கூட்டணியில் இருக்கிறது. அதனால் பிரதமருடன், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்,…

Read More

எம்.பி ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய தமிழ் சிறுமி தொடர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை !!

எம்.பி ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய தமிழ் சிறுமி தொடர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை !!

இலங்கை முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.பியுமான ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய இந்திய வம்சாவளி தமிழ் சிறுமி தொடர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு, தீ காயங்களுடன் இறந்த சம்பவத்தை அடுத்து, நாட்டின் பல இடங்களில் சிறார் மற்றும் பெண் உரிமைகள் தொடர்பிலான போராட்டங்கள் வலுப் பெற்றுள்ளன. ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய 16 வயது சிறுமி, கடந்த 3ஆம் தேதி தீ காயங்களுடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண சமீபத்தில் தெரிவித்திருந்தார். கடந்த 15ம் தேதி உயிரிழந்த அந்த சிறுமியின் பிரேதப் பரிசோதனை, கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்டது. அதில், சிறுமி தொடர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கப்பட்டிருந்தது…

Read More
1 2 3 4