இஸ்ரேலில் இனி பொது மக்கள் முக கவசம் அணிய தேவையில்லை என அறிவிப்பு

இஸ்ரேலில் இனி பொது மக்கள் முக கவசம் அணிய தேவையில்லை என அறிவிப்பு

இஸ்ரேலில் 16 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், 16 வயதிற்கு மேற்பட்ட 81 சதவீத பேருக்கு இரண்டு தவணை கொரோனா கடந்த தடுப்பூசி ஏப்ரல் மாதம் செலுத்தப்பட்டது. இதையடுத்து, அங்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வரும் நிலையில் பொது இடங்களில் உள்ள உள்அரங்கங்களில் இனி பொது மக்கள் முக கவசம் அணிய தேவையில்லை என அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Read More

பாகிஸ்தானில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி 30 பேர் பலி

பாகிஸ்தானில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி 30 பேர் பலி

தெற்கு பாகிஸ்தானில் இரண்டு விரைவு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் பலியாகினர். தெற்கு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கோட்கி பகுதியில் சர் சையது விரைவு ரயிலும், மில்லத் விரைவு ரயிலும் இன்று (ஜூன் 7) காலை நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் 14 ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. இந்த சம்பவத்தில் 30 பேர் பலியானதாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கோட்கி மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் மீட்புக்குழுவினர் தெரிவித்து உள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More