‘முன்னாள் விடுதலைப் புலிகள்’ 16 பேர் உள்பட 94 பேருக்கு இலங்கை ஜனாதிபதி பொது மன்னிப்பு

‘முன்னாள் விடுதலைப் புலிகள்’ 16 பேர் உள்பட 94 பேருக்கு இலங்கை ஜனாதிபதி பொது மன்னிப்பு

பௌத்தர்களின் புனித நாளான பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு, 94 கைதிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். சிறு குற்றங்கள் மற்றும் யுத்த காலப் பகுதியில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் உள்ளிட்ட 93 பேரை விடுதலை செய்வதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்திருந்தார். அநுராதபுரம் சிறைச்சாலையில் இன்று விடுதலை செய்யப்பட்டவர்களில் 16 தமிழ் அரசியல் கைதிகள் அடங்குவதாக சிறைச்சாலை திணைக்கள ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். இந்த 16 பேரும் முன்னாள் விடுதலைப் புலிகள் என்று இலங்கை அரசு தெரிவிக்கிறது. ஏனைய 77 பேரும் சிறு குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் அவர் தெரிவித்தார்….

Read More

வெயில் கொடுமையால் 4 நாட்களில் வெயிலின் தாக்கத்தால் கனடாவில் 233 பேர் பலி

வெயில் கொடுமையால் 4 நாட்களில் வெயிலின் தாக்கத்தால் கனடாவில் 233 பேர் பலி

கனடாவில் கடும் வெப்ப நிலை நீடித்து வருகிறது. ஜூன் முதல் ஆகஸ்ட் வரை அங்கு கோடைக்காலம். இந்தாண்டு கோடைக்காலம் கடும் வெப்பமானதாக உள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் லிட்டனில் செவ்வாயன்று புதிய உச்சமாக 49.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. மிக அதிகபட்சமாக லைட்டான் நகரத்தில் 121 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருக்கிறது. வெப்ப அலை தொடங்கிய நான்கு நாட்களில் கனடாவில் 233 பேர் இறந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியாவில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை வரும் நாட்களில் மேலும் உயரும் என்கின்றனர். மக்களை வீடுகளை விட்டு வர வேண்டாம் என்றும் குளிர்சாதன அறைகளில் இருக்கும் படியும் கனடா அரசு கேட்டுக்கொண்டுள்ளது….

Read More

பாலியல் வழக்கில் கேரளாவின் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைது !!

பாலியல் வழக்கில் கேரளாவின் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைது !!

கேரளாவில் சக கட்சி பெண் ஊழியரை தொடர் பாலியல் வன்கொடுமை செய்த, ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் தலைவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியின் கோழிக்கோடு வடகரா பகுதி குழு உறுப்பினராக உள்ள பெண், அக்கட்சியின் பகுதி செயலாளர் பாபுராஜ் மற்றும் கட்சியின் இளைஞர் அணி மண்டல செயலாளர் லிஜேஷ் ஆகிய இருவரும் தன்னுடைய வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, தன்னை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியதாக புகார் அளித்தார். இதையடுத்து இருவரையும் நேற்று (ஜூன் 28) போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து கோழிக்கோடு சரக காவல் கண்காணிப்பாளர் ஏ.ஸ்ரீநிவாஸ் கூறியதாவது:பாதிக்கப்பட்ட பெண் இரண்டு குழந்தைகளுக்கு தாய். மூன்று மாதங்களுக்கு முன் அவருடைய வீட்டுக்குள்…

Read More

‘ஸ்பெல்லிங் பீ:’ தொடர்ந்து கலக்கும் இந்திய வம்சாவளி குழந்தைகள்

‘ஸ்பெல்லிங் பீ:’ தொடர்ந்து கலக்கும் இந்திய வம்சாவளி குழந்தைகள்

அமெரிக்காவில் பள்ளிக் குழந்தைகளுக்கு இடையே ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் புகழ் பெற்ற போட்டி ‘ஸ்பெல்லிங் பீ’. இதில், கடந்த 2008ம் ஆண்டு முதல் தொடர்ந்து 12 ஆண்டுகளாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்திய – அமெரிக்க குழந்தைகள்தான் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று வருகின்றனர். கோவிட் பெருந்தொற்று பாதிப்பால் 2020ம் ஆண்டு இந்தப் போட்டி நடைபெறவில்லை. கடைசியாக 2019ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது 8 பேர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அவர்களில் 7 பேர் இந்திய – அமெரிக்க குழந்தைகள். இந்நிலையில், இந்த ஆண்டு ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டி ஆன்லைன் முறையில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்க லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்தவர். அதில், 209 குழந்தைகள் தேர்வாகினர். அவர்களில்…

Read More

கிருஷ்ண விரிந்தவனத்தில் மங்கள ஆர்த்தி !!

கிருஷ்ண விரிந்தவனத்தில் மங்கள ஆர்த்தி !!

கிருஷ்ண விரிந்தவனத்தின் ஸ்ரீ ஆனந்த தாமில் காலை மங்கள ஆர்த்தி !! இந்த அற்புத ஆர்த்தி விடியோவை பார்த்து … பக்தி பரவசமடைந்து… அனைவரோடும் பகிருங்கள்… ஹரே கிருஷ்ணா தினமொரு தார்மிக செய்தி உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்🙏🙏 ஹரே கிருஷ்ணா !!

Read More

குறைந்த நேரத்தில் அமெரிக்காவைவிட அதிக மக்களுக்கு வேக்சின் செலுத்தி இந்தியா பெரும் சாதனை !!

குறைந்த நேரத்தில் அமெரிக்காவைவிட அதிக மக்களுக்கு வேக்சின் செலுத்தி  இந்தியா பெரும் சாதனை !!

உலகத்திலேயே அதிகளவு தடுப்பூசி செலுத்திய நாடுகளில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கோவிட் பரவலை தடுக்க நாடு முழுவதும் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று (ஜூன் 28) காலை 8 மணி நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம் 32 கோடியே 36 லட்சத்து 63 ஆயிரத்து 297 ‛டோஸ்’ தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து அதிக தடுப்பூசி செலுத்தியதில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா புதிய மைல்கல்லை எட்டியது. அமெரிக்காவில் கடந்தாண்டு டிசம்பர் 14 முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தநிலையில், 32.33 கோடி தடுப்பூசிகள்…

Read More

ஜம்மு – காஷ்மீரில் சீக்கிய பெண்களை கடத்தி ஜிஹாதிகள் கட்டாய மத மாற்றம் !!

ஜம்மு – காஷ்மீரில் சீக்கிய பெண்களை கடத்தி ஜிஹாதிகள் கட்டாய மத மாற்றம் !!

ஜம்மு – காஷ்மீரில் முதியவருக்கு திருமணம் செய்து வைக்க சீக்கிய பெண்கள் இருவரைக் கடத்தி, ஜிஹாதிகள் கட்டாய மத மாற்றம் செய்ததைக் கண்டித்து, சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். வயதான நபர்களுக்குத் திருமணம் செய்து வைக்க, ஜம்மு – காஷ்மீரில் சீக்கிய பெண்கள் இருவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து சிரோன்மணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த மன்ஜிந்தர் எஸ் சிர்சா தலைமையில் சீக்கியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, மன்ஜிந்தர் எஸ் சிர்சா செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்து உள்ளதாவது: 62 வயதுடைய முதியவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக, இரு சீக்கிய சிறுமிகள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு மத மாற்றம் செய்யப்பட்டு…

Read More

மேற்கு ஆப்ரிக்காவில் 14 வயது ஜிஹாதி சிறுவர்கள் படை தாக்குதலில் 130 பேர் பலி !!

மேற்கு ஆப்ரிக்காவில் 14 வயது ஜிஹாதி சிறுவர்கள் படை தாக்குதலில் 130 பேர் பலி !!

மேற்கு ஆப்ரிக்க நாடான புர்கினா பாசோவில் 130 பொது மக்கள் கொல்லப்பட்ட கொடூர தாக்குதலில், அல்கொய்தா மற்றும் ஐ.எஸ்., அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 14 வயதுக்குட்பட்ட ஜிஹாதி சிறுவர்களை பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. மேற்கு ஆப்ரிக்காவிலிருந்து கிழக்கு வரை உள்ள மித வறண்ட பகுதி சாஹேல் பிராந்தியம் எனப்படுகிறது. செனகல், மாலி, புர்கினா பாசோ, அல்ஜீரியா, நைஜீர், நைஜீரியா, சூடான் ஆகிய நாடுகள் இப்பிராந்தியத்தில் வருகின்றன. இப்பிராந்தியம் பல ஆண்டுகளாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. 2013ல் வடக்கு மாலியின் பெரும் பகுதிகளை பயங்கரவாதிகள் கைப்பற்றியதில் இருந்து இந்நிலை தொடர்கிறது. அப்பகுதி தான் போதைப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் ஜிகாதிகளுக்கான முக்கிய பாதை. ஜிஹாதி பயங்கரவாதிகளை எதிர்க்க அப்பிராந்தியத்தில் உள்ள அரசுகளுக்கு…

Read More

டாஸ்மாக்கில் சாராய கூட்டத்தை கட்டுப்படுத்தலாம், கோவில்களில் சுலபமில்லை: தி மு க அமைச்சர் சேகர்பாபு

டாஸ்மாக்கில் சாராய கூட்டத்தை கட்டுப்படுத்தலாம், கோவில்களில் சுலபமில்லை: தி மு க அமைச்சர் சேகர்பாபு

டாஸ்மாக் கடைகள் பொது வெளியில் இருப்பதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கூட்டத்தை கட்டுப்படுத்த கூடும். ஆனால், கோவில்கள் திறந்தால் பொதுமக்களை கட்டுப்படுத்துவது சுலபம் இல்லை என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமாக உள்ள திருக்கோவில் மற்றும் இடங்களில் குறைகளை தெரிவிக்க குறைகேட்பு முகாம் துவங்கி உள்ளோம். அதற்காக தொலைபேசி எண் 044-28339999 வெளியிடப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் அனைத்தும் கணினியில் சேகரிக்கப்படும். பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் அனைத்தும் 15 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்ய இருக்கிறேன். கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது. முற்றிலும் குறைந்த பிறகு, கோவில்கள் திறப்பு…

Read More

சென்னையிலும் பரவிய டெல்டா ப்ளஸ் கொரோனா; நர்சுக்கு பாதிப்பு

சென்னையிலும் பரவிய டெல்டா ப்ளஸ் கொரோனா; நர்சுக்கு பாதிப்பு

இந்தியாவில் கடந்த ஆண்டில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பின் முதல் அலையை விட 2வது அலையில் கடும் விளைவுகள் ஏற்பட்டன. இதன் தொடர்ச்சியாக, பல்வேறு பூஞ்சை நோய் பாதிப்புகளும் ஏற்பட தொடங்கின. நாடு அதிக பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளையும் சந்தித்தது. நாட்டில் கொரோனா வைரசானது உருமாறிய வகையில் பல்வேறு வடிவங்களை எடுத்து வருகிறது என நிபுணர்கள் கூறி வருகின்றனர். அவை முதலில் இங்கிலாந்து, பிரேசில், தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டன. பின்பு பல நாடுகளுக்கும் அவை பரவின. இந்நிலையில், இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா, 2வது அலையில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் திடீரென ஒரு சில நாடுகளில் டெல்டா பிளஸ் என்ற உருமாறிய கொரோனா…

Read More
1 2 3 5