நேபாளத்தில் கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்

நேபாளத்தில்  கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் 7 ஆயிரத்து 137- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய நேற்று 16,147 பேருக்கு சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்புடன் 48,711- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து 1,612- பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 67- பேரும், இதுவரை 3,325- பேரும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் தீவிரமாக உள்ளதால், இந்தியாவுடனான 22 எல்லை முனைகளை மூடுவதாக நேபாள அரசு அண்மையில் அறிவித்தது….

Read More

கேரள முதல்வராக மாமனார் & எம்.எல்.ஏ வாக மருமகன்முகமது ரியாஸ்!!

கேரள முதல்வராக மாமனார் & எம்.எல்.ஏ வாக மருமகன்முகமது ரியாஸ்!!

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முதல்வருமான பினராயி விஜயனின் மகள் வீணாவைத் திருமணம் செய்தவர் முகமது ரியாஸ். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தேசியத் தலைவராக முகமது ரியாஸ் உள்ளார். கேரள சட்டசபைத் தேர்தலில் கோழிக்கோடு மாவட்டம், பேப்பூர் தொகுதியில் போட்டியிட்ட முகமது ரியாஸ் வெற்றி பெற்றார். தர்மடம் தொகுதியில் போட்டியிட்ட பினராயி விஜயன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கேரள சட்டசபையில் கடந்த காலங்களில் தந்தை – மகன், தந்தை – மகள் என, சட்டசபைக்குள் எம்.எல்.ஏ.,க்களாக வந்துள்ளனர். ஆனால், முதல் முறையாக மாமனார், மருமகன் ஜோடியாக சட்டசபைக்குள் வருவது இதுதான்…

Read More