தலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் ?

தலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் ?

தமிழக தலைமை செயலர், டிஜிபி, உள்துறை செயலர் அவசரமாக டில்லி கிளம்பி சென்றுள்ளனர். இது பல்வேறு யூகங்களை கிளப்பி உள்ளது. தமிழக டிஜிபி திரிபாதி, அரசு உள்துறை இணை செயலர் முருகன் ஆகியோர் காலை ஏர் இந்தியா விமானத்தில் டில்லி கிளம்பி சென்றனர். தொடர்ந்து தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன், உள்துறை செயலர் பிராபகர் இருவரும் தனியார் விமானம் மூலம் டில்லி கிளம்பி சென்றனர். சமீபத்தில் தேர்தல் முடிந்த நிலையில், உயர் அதிகாரிகள் டில்லி சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் அழைப்பின் பேரில், இவர்கள் டில்லி சென்றுள்ளதாக தெரிகிறது. வேகமாக பரவி வரும் கொரோனா காரணமாக முக்கிய ஆலோசனை நடத்த அதிகாரிகள் டில்லி…

Read More

உலகம் செய்தி 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை

உலகம் செய்தி  20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை பரவி வருகிறது. இந்தியாவில் வைரஸின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் தற்போது இரண்டாம் அலை அதிகரித்து வருவதால் பல இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தடுப்பு மருந்து செலுத்தும் பணி தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில், உலகில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு தடுப்புமருந்து சென்று சேர்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதற்காக உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் மூலமாக ஆப்பிரிக்க மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தடுப்பு மருந்து வழங்கி வருகிறது. அதே சமயத்தில் உலகின் பணக்கார நாடுகளுக்கு அதிவேகத்தில் தடுப்பு மருந்துகள் கிடைத்து வருகின்றன. இந்நிலையில் உலகின் சக்திவாய்ந்த…

Read More