பெட்ரோல், டீசல் விலை குறித்து மோடி ஏன் பேசுவதில்லை

பெட்ரோல், டீசல் விலை குறித்து மோடி ஏன் பேசுவதில்லை

பெட்ரோல், டீசல் விலை குறித்து ஏன் பிரதமர் மோடி பேசுவதில்லை என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: மத்திய அரசின் வரிவசூலால் ஒரு காருக்கு பெட்ரோல், டீசல் நிரப்புவது என்பது தேர்வைவிட எந்த விதத்திலும் குறைந்தது அல்ல. பெட்ரோல், டீசல் விலை குறித்து ஏன் பிரதமர் மோடி பேசுவதில்லை. பெட்ரோல், டீசலுக்காக செலவிடும் தொகை குறித்தும் மோடி பேச வேண்டும். இவ்வாறு ராகுல் தெரிவித்து உள்ளார்.

Read More

நக்சல்களிடம் சிக்கிய சிஆர்பிஎப். வீரர் விடுதலை: குடும்பத்தினர் மகிழ்ச்சி

நக்சல்களிடம் சிக்கிய சிஆர்பிஎப். வீரர் விடுதலை: குடும்பத்தினர் மகிழ்ச்சி

நக்சல்கள் பிடியில் சிக்கியிருந்த சிஆர்பிஎப் வீரர் ராகேஷ்வர் சிங் மான்ஹாஸ் இன்று விடுவிக்கப்பட்டார். சத்தீஸ்கரில், பீஜப்பூர், சுக்மா மாவட்டங்கள் எல்லையில் உள்ள வனப் பகுதியில் கடந்த 3-ம் தேதியன்று சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போஸீஸ் படையின் கோபுரா பிரிவினர் அடங்கிய கூட்டுப் படை வீரர்கள், நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது, நக்சல்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், 22 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 31 வீரர்கள் காயமடைந்தனர். இந்த தாக்குதலின் போது ராகேஷ்வர் சிங் மான்ஹாஸ் என்ற வீரர் காணாமல் போனார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவர் தங்கள் பிடியில் இருப்பதாகவும் அவரை விடுவிக்க வேண்டுமெனில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என…

Read More