இஸ்ரேலில் மெரோனில் புகழ்பெற்ற யாத்திரை ஸ்தலத்தில் கூடிய மக்கள் கூட்டத்தில் சிக்கி 44 பேர் பலி

இஸ்ரேலில் மெரோனில் புகழ்பெற்ற யாத்திரை ஸ்தலத்தில் கூடிய மக்கள் கூட்டத்தில் சிக்கி 44 பேர் பலி

மெரோன்: வடக்கு இஸ்ரேலில் உள்ள மெரோனில் புகழ்பெற்ற யாத்திரை ஸ்தலத்தில் கூடிய மக்கள் கூட்டத்தில் சிக்கி 44 பேர் பலியானார்கள். வடக்கு இஸ்ரேலில் புகழ்பெற்ற கல்லறை ஸ்தலத்தில் விடுமுறையை கொண்டாட ஏராளமான இஸ்ரேல் மக்கள் ஒன்று கூடுவார்கள். அவ்வாறு கூடியதில் இன்று(ஏப்.,30) கூட்டத்தில் சிக்கி 44 பேர் பலியாகினர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த ஆண்டு இந்த ஸ்தலம் மூடப்பட்டிருந்தது. இந்த ஆண்டு தடுப்பூசியால் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டதால் மீண்டும் யாத்திரை ஸ்தலம் திறக்கப்பட்டது. இந்நிலையில் மக்கள் கூட்டம் கூடியதால் கூட்டநெரிசலில் சிக்கி 44 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை…

Read More

கேரளாவில் 6 நாட்கள் ஊரடங்கு – முதல்-மந்திரி பினராயி விஜயன் தகவல்

கேரளாவில் 6 நாட்கள் ஊரடங்கு – முதல்-மந்திரி பினராயி விஜயன் தகவல்

கேரளாவில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ள நிலையில் பொதுமக்கள் சுய கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். தேவையில்லாமல் தெருவீதிகளில் நடமாடுவது, ஊர் சுற்றுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும். தானாக முன் வந்து விழாக்களை தவிர்த்து, பயணங்களை ரத்து செய்ய வேண்டும். அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு மேலும் கட்டுப்பாடுகளை திணிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. தற்போது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அதே தளர்வுகளுடன் வரும் 4-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த நாட்களில் அரசு அலுவலகங்களின் செயல்பாடு குறித்து பின்னர் அறிவிக்கப்படும். டி.வி.சீரியல் படப்பிடிப்பு நிறுத்தப்படும். காய்கறி, மீன் வியாபாரிகள் 2 முககவசம் அணிந்து,…

Read More

மே.வங்கம், அசாமில் பா.ஜ., ஆட்சி: கருத்து கணிப்பு !!

மே.வங்கம், அசாமில் பா.ஜ., ஆட்சி: கருத்து கணிப்பு !!

தமிழகம், புதுச்சேரி, கேரளா உட்பட, ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தேதிகளை, தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார். இதன்படி தமிழகம், புதுச்சேரிக்கு ஒரே கட்டமாக, வரும், ஏப்ரல் 6ம் தேதியும், அசாமிற்கு மூன்று கட்டங்களாகவும்,மேற்கவங்க மாநிலத்திற்கு எட்டு கட்டங்களாகவும், தேர்தல் நடந்து முடிந்தது. பதிவான ஓட்டுகள் மே 2ல் ஓட்டு எண்ணப்பட உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை இந்தியா டுடே, ரிபப்ளிக் டி.வி., சி.என்.எக்ஸ், ஈ.டி.ஜி, ரிசர்ஜ், பி. மார்க், ஏ.பி.பி., ‘சி’ ஓட்டர்ஸ் ஆகியவை கருத்துகணிப்புகளை வெளியிட்டுள்ளன. அதன்விவரம்: ரிபப்ளிக் சி. என்.எக்ஸ்: கருத்து கணிப்பு தமிழகம்: தமிழகத்தில் 234 தொகுதிகளில் அ.தி.மு.க., கூட்டணி…

Read More

கடும் கட்டுப்பாடுகள் காரணமாக டாக்சி டிரைவர்கள் சொந்த ஊர் சென்று விட்டனர்

கடும் கட்டுப்பாடுகள் காரணமாக டாக்சி டிரைவர்கள் சொந்த ஊர் சென்று விட்டனர்

மராட்டியத்தில் கொரோனா நோய் பரவல் சங்கிலியை உடைக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதில் நோய் பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிப்பது குறித்தும் மாநில அரசு ஆலோசனை நடத்தி வந்தது. இந்தநிலையில் அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக பெரும்பாலான மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். எனவே போதிய வருமானம் இல்லாததால் மும்பையை சேர்ந்த டாக்சி டிரைவர்கள் சொந்த ஊர் திரும்பி உள்ளனர். தற்போது குறைந்த அளவில் தான் டாக்சிகள் சாலைகளில் ஓடி வருகின்றன. ஊரடங்கு அச்சம், போதிய வருமானம் இல்லாத காரணத்தால் 75 சதவீத டாக்சி டிரைவர்கள் சொந்த கிராமங்களுக்கு சென்றுவிட்டனர். தற்போது 5 ஆயிரம் டாக்சிகள் தான் ஓடுகின்றன. அவை பெரும்பாலும் விமானநிலையம், ரெயில்நிலையங்கள் வெளியில்…

Read More

கோவாக்சின் 617 உருமாறிய கொரோனா வகைகளை வீரியமிழக்க செய்கிறது – டாக்டர் ஆண்டனி பாஸி

கோவாக்சின் 617 உருமாறிய கொரோனா வகைகளை வீரியமிழக்க செய்கிறது – டாக்டர் ஆண்டனி பாஸி

கோவாக்சின் தடுப்பூசி, 617 உருமாறிய கொரோனா வகைகளை வீரியமிழக்க செய்வதாக அமெரிக்க மருத்துவ நிபுணர் ஆண்டனி பாஸி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகராகவும், பெருந்தொற்று நிபுணராகவும் உள்ள டாக்டர் ஆண்டனி பாஸி, கான்பரன்ஸ் கால் மூலம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமீபத்தில் கிடைத்த தரவுகளின்படி, இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி, கொரோனாவின் 617 உருமாறிய கொரோனா வகைகளை வீரியமிழக்க செய்கிறது. எனவே இந்தியாவின் உண்மையான கஷ்டங்களை பார்க்கும் போதும் தடுப்பூசி போட்டுக்கொள்வதுதான் கொரோனாவுக்கு எதிரான ஒரே வழிமுறை என்பது தெரியவருகிறது. இவ்வாறு அவர் கூறினார். கொரோனா நோய்த்தொற்று தொடர்பான வெள்ளை மாளிகையின் சீனியர் ஆலோசகர் ஆண்டி ஸ்லாவிட் கூறுகையில், ‛தடுப்பூசி உற்பத்தியை இந்தியா துரிதப்படுத்த,…

Read More

யாழ் பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் திறப்பு

யாழ் பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் திறப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இன்று (ஏப்ரல் 23) திறந்து வைக்கப்பட்டது. இந்த நினைவுத்தூபி பல்கலைக்கழக மாணவ சமூகத்தினால் காலையில் திறந்து வைக்கப்பட்டது. நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்டதை அடுத்து, இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இறுதிக் யுத்தத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி இரவு உடைக்கப்பட்டது. பல்கலைக்கழக நிர்வாகம் இரவோடு இரவாக இந்த தூபியை தகர்த்திருந்த நிலையில், அன்றிரவு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் பெரிய போராட்டம் தொடங்கியது. இந்த நிலையில், அன்று முதல் தமிழர் பகுதிகளில் போராட்டங்கள் வலுப் பெற்றன.

Read More

திட்டமிட்டபடி 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை; வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை- தேர்தல் கமிஷன்

திட்டமிட்டபடி 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை; வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை- தேர்தல் கமிஷன்

அன்றைய தினம் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து தலைமை தேர்தல் கமிஷன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை பெரும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கிடையே தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தல்களை தேர்தல் கமிஷன் நடத்தி முடித்துள்ளது. 8 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்ட மேற்கு வங்காளத்தில் 7 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. 8-வது இறுதிகட்ட தேர்தல் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.ஒரு மினி பொதுத்தேர்தல் போன்று அமைந்து விட்ட இந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை வரும் 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திட்டமிட்டபடி நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது….

Read More

பாகிஸ்தான் சீனாவிடமிருந்து 3-வது கட்டமாக 10 லட்சம் தடுப்பூசிகளை வாங்கியுள்ளது

பாகிஸ்தான் சீனாவிடமிருந்து 3-வது கட்டமாக 10 லட்சம் தடுப்பூசிகளை வாங்கியுள்ளது

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரசின் 3-வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாக அங்கு வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் 4,825 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அங்கு கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்துள்ளது.இதுவரை அங்கு 8 லட்சத்து 452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் நேற்று ஒரே நாளில் 70 பேர் கொரோனாவுக்கு பலியானது மூலம் மொத்த கொரோனா பலி எண்ணிக்கை…

Read More

ஹம்பி படவிலிங்க அர்ச்சகர் கிருஷ்ண பட் காலமானார் !!

ஹம்பி படவிலிங்க அர்ச்சகர் கிருஷ்ண பட் காலமானார் !!

கர்நாடக மாநிலம் ஹம்பியில் உள்ள சிவலிங்க கோவில் அர்ச்சகரும், சிவபக்தருமான கிருஷ்ண பட், 87 வயதில் காலமானார். விஜயநகரா மாவட்டம் புராதன ஹம்பி நகரில் படவிலிங்க கோவில் உள்ளது. இந்த கோவில் குளத்தின் நடுவில் மூன்று மீட்டர் உயரத்தில் ஒரே கல்லாலான சிவலிங்கம் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சிவமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா கசரவள்ளி கிராமத்தை சேர்ந்த இவர், 1979 ஹம்பிக்கு வந்து தங்கினார். அன்று முதல் கிருஷ்ணர் பட் தினமும் படவிலிங்கத்திற்கு பூஜை செய்து வந்தார். கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் பூஜை செய்வதை நிறுத்தினார். தற்போது அவரது மகன் பூஜையை தொடர்ந்து செய்கிறார். இந்நிலையில் அவர் வயது முதிர்வு காரணமாக நேற்று காலமானார். லிங்கத்தை…

Read More

அணுசக்தி யுரேனியத்துடன் இலங்கை கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த சீன கப்பல் !!

அணுசக்தி யுரேனியத்துடன் இலங்கை கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த சீன கப்பல் !!

இலங்கையின் தென் பகுதியிலுள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அணுசக்திக்காக பயன்படுத்தப்படும் யுரேனியம் ஏற்றிய சீனாவிற்கு சொந்தமான MV BBC Naples என்ற கப்பல் வருகை தந்துள்ளதாக இலங்கை அணுசக்தி ஒழுங்குப்படுத்தல் பேரவை தெரிவித்துள்ளது. இந்த கப்பலில் யுரேனியம் உள்ளதாக இலங்கை அணுசக்தி ஒழுங்குப்படுத்தல் பேரவையின் பணிப்பாளர் நாயகம் எச்.எல்.அனில் ரஞ்சித் ஊடகங்களுக்கு தெரிவித்தார். இப்போது இந்தக் கப்பல் இலங்கை கடல் எல்லையில் இருந்து வெளியேறிவிட்டது என்று இலங்கை அரசு தரப்பு தெரிவிக்கிறது. இலங்கைக்குள் ரசாயன பொருட்களை விமானத்தின் ஊடாகவோ கப்பலின் ஊடாகவோ கொண்டு வருவதற்கு இலங்கை அணுசக்தி ஒழுங்குப்படுத்தல் பேரவையிடம் அனுமதி பெறுவது அவசியமானது என எச்.எல்.அனில் ரஞ்சித் கூறுகிறார். எனினும், குறித்த கப்பல் எந்தவித அனுமதியும்…

Read More
1 2 3 4