ஊர்ந்து போனவர் ஊர் ஊராக செல்கிறார்: முதல்வரை விமர்சித்த ஸ்டாலின்

ஊர்ந்து போனவர் ஊர் ஊராக செல்கிறார்: முதல்வரை விமர்சித்த ஸ்டாலின்

ஊர்ந்து ஊர்ந்து போனவர் தற்போது ஊர் ஊராக சென்று கொண்டிருப்பதாக முதல்வர் பழனிசாமியை திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் நிற்பதை பார்த்தால் தற்போதைய ஆட்சியின் கொடுமையை விட இது ஒன்றும் பெரிது இல்லை என்பது போல் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு முதல்வர் பழனிசாமி இங்கே வந்திருக்கிறார். ஊர்ந்து ஊர்ந்து போனவர் தற்போது ஊர் ஊராக சென்று கொண்டிருக்கிறார். அதனை சொன்னால் அவருக்கு கோபம் வரும். பாம்பு கடியில் உள்ள விஷத்தை விட துரோகத்தின் விஷம்…

Read More

தே.ஜ., கூட்டணிக்கு ஆதரவான அலை: பிரதமர்

தே.ஜ., கூட்டணிக்கு ஆதரவான அலை: பிரதமர்

சட்டசபை தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகிறது என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது: 5 மாநில தேர்தல் அறிவித்த பிறகு, அசாம், மே.வங்கம், கேரளா, தமிழகம் மாநிலங்களுக்கு சென்ற நான், தற்போது புதுச்சேரி வந்துள்ளேன். இந்த 5 மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவான வீசுகிறது என்பதை தெரிந்து கொண்டேன்.கடந்த முறை புதுச்சேரி வந்த போது, ஆட்சி மாற்றம் தேவை என மக்கள் விரும்புவதை புரிந்து கொண்டேன். பல ஆண்டுகளாக செயல்படாத காங்கிரஸ் அரசுகள் பட்டியலில் புதுச்சேரி அரசுக்கு…

Read More

சூயஸ் கால்வாயில் தரை தட்டிய ‘எவர் கிவன்’ கப்பல்: தினமும் 70 ஆயிரம் கோடி ரூபாய் சரக்கு தேக்கம்

சூயஸ் கால்வாயில் தரை தட்டிய ‘எவர் கிவன்’ கப்பல்: தினமும் 70 ஆயிரம் கோடி ரூபாய் சரக்கு தேக்கம்

உலக சரக்குப் போக்குவரத்தின் முக்கிய வழிவாய்க்காலாக விளங்கும் சூயஸ் கால்வாயில் பிரும்மாண்ட கொள்கலன் கப்பல் ஒன்று குறுக்காகத் திரும்பி தரைதட்டி சிக்கிக்கொண்டதால் அந்த வழியாக செல்லவேண்டிய பிற சரக்குக் கப்பல்கள் செல்ல முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் (9.6 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்புள்ள சரக்கு தேங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்கின்றன கப்பல் போக்குவரத்து தொடர்பான தரவுகள். இதன் பொருள் ஒவ்வொரு மணி நேரமும் சுமார் 40 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது என்பதாகும். மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கும் இந்த சூயஸ் கால்வாய் ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையிலான சுருக்கமான கடல்வழி….

Read More

ஹிந்து விரோத கட்சிகளுக்கு இல்லை ஓட்டு: வீடுகள் தோறும் விழிப்புணர்வு நோட்டீஸ்

ஹிந்து விரோத கட்சிகளுக்கு இல்லை ஓட்டு: வீடுகள் தோறும் விழிப்புணர்வு நோட்டீஸ்

ஹிந்து விரோத கட்சிகளுக்கு ஓட்டு இல்லை என விருதுநகரில் பெரியகாளியம்மன் கோயில் தெருவில் வீடுகளில் விழிப்புணர்வு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. சமீப காலமாக அரசியல் கட்சிகள் பல முற்போக்கு என கூறி ஹிந்து விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. இதை கண்டு வெகுண்டெழுந்த பலர் தற்போது தேர்தல் நேரத்தில் தங்கள் எதிர்ப்பை பலமாக காட்டி வருகின்றனர். அந்த வகையில் விருதுநகர் பெரியகாளியம்மன் கோயில் தெருவில் வீட்டின் முன்பு ஹிந்து விரோத கட்சிகளுக்கு எங்கள் ஓட்டு கிடையாது என்றும், ஹிந்து கோயில், கோபுரங்கள், மடலாயங்களை மதிப்பவர்களுக்கே எங்கள் ஓட்டு என எச்சரிக்கும் வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு நோட்டீஸ்களை ஒட்டி உள்ளனர். வீட்டின் உரிமையாளர் நாகராஜன் கூறியதாவது: விஸ்வ ஹிந்து…

Read More

திமுக ஆட்சி என்றால் அராஜக ஆட்சி – முதல்வர் பழனிசாமி

திமுக ஆட்சி என்றால் அராஜக ஆட்சி – முதல்வர் பழனிசாமி

திமுக ஆட்சி என்றால் அராஜக ஆட்சி என மதுரையில் நடந்த பிரசாரத்தின் போது முதல்வர் பழனிசாமி கூறினார். மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது: தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. ஏழை, எளிய மக்கள் மீது அக்கறை கொண்டது அ.தி.மு.க., ஆட்சி. மதுரைகிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் அராஜகமானவர். அதிமுக வேட்பாளர் அமைதியானவர். பண்பானவர். தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது நீர் நிலைகள் நிரம்பி காட்சி அளிக்கின்றன. திமுக ஆட்சி என்றாலே அராஜக ஆட்சி தான். அக்கட்சி ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்து தான் நடக்கும். தி.மு.க., ஆட்சியில் நிலங்கள் அபகரிக்கப்பட்டது. மேலூரில் முதல்வர் பிரசாரத்தின் போது, விவசாயிகள் மத்தியில்…

Read More

கோவில் அடிமை நிறுத்து – “அழிந்துவரும் தமிழக கோவில்கள்”சத்குருவுக்கு பிரபலங்கள் ஆதரவு

கோவில் அடிமை நிறுத்து – “அழிந்துவரும் தமிழக கோவில்கள்”சத்குருவுக்கு பிரபலங்கள் ஆதரவு

தமிழகத்தில் சிதிலமடைந்த கோவில்களின் வீடியோக்களை, பகிர்ந்த சத்குருவுக்கு பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற, பல நுாறு கோவில்கள் முறையாக பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருகின்றன. ஈஷா யோகா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, ‘கோவில் அடிமை நிறுத்து’ என்ற இயக்கத்தை துவக்கினார். இந்நிலையில், 100க்கும் மேற்பட்ட கோவில்களின் வீடியோ, போட்டோக்களை பக்தர்கள் டுவிட்டரில் பதிவிட்டனர். அவற்றை, சத்குரு பகிர்ந்துள்ளார். அதற்கு, பிரபலங்கள், ‘கோவில் அடிமை நிறுத்து’ என்ற ‘ஹேஷ்டேக்’ பயன்படுத்தி ஆதரவு தெரிவித்தனர். கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், ‘பையோகான்’ நிறுவனத் தலைவர் கிரண் மசூம்தார், முன்னாள் சி.பி.ஐ., இயக்குனர் நாகேஸ்வர ராவ், நடிகைகள் கங்கனா ரணவத், கஸ்தூரி, ஸ்ரீதிவ்யா, ஸ்ரீநிதி ஷெட்டி, ரவினா…

Read More

கொரோனா காலத்திய கடன்களுக்கு முழு வட்டி தள்ளுபடி செய்ய இயலாது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

கொரோனா காலத்திய கடன்களுக்கு முழு வட்டி தள்ளுபடி செய்ய இயலாது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக வங்கி உள்ளிட்ட சேவைகள் முடங்கியதோடு, கடன்களுக்கான வட்டியை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் வட்டிக்கு வட்டியாக கூட்டு வட்டித் தொகையை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மார்ச் முதல் ஆகஸ்ட் இறுதி வரையிலான ஊரடங்கு காலத்தில் வங்கிக் கடன்களுக்கான கூட்டு வட்டியை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “இந்த கொரோனா காலத்தில் அனைத்து துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசுக்கும் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வருவாய் இழப்பு…

Read More

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,262 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,262 பேருக்கு கொரோனா

உலக அளவில் அதிக கொரோனா பாதிப்புகளை சந்தித்த நாடுகளில் ஒன்றாக இருந்த இந்தியாவில் 10 ஆயிரத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்ட தினசரி கொரோனா பாதிப்பு, இந்த மாதத்தில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,262 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,17,34,058 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,60,441 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 23,907 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்….

Read More

பொது செய்தி தமிழ்நாடு தமிழகத்திற்கு கூடுதலாக 235 கம்பெனி துணை ராணுவம் வருகை

பொது செய்தி தமிழ்நாடு தமிழகத்திற்கு கூடுதலாக 235 கம்பெனி துணை ராணுவம் வருகை

தமிழகத்தில், தேர்தல் பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக 235 கம்பெனி துணை ராணுவம் விரைவில் வர உள்ளது. தமிழகத்தில் ஏப்., 6ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணிக்கு 330 கம்பெனி துணை ராணுவம் கேட்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்திருந்தார். இதன்படி 65 கம்பெனி துணை ராணுவம் தமிழகம் வந்தது. பல இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர்கள், அங்கு கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்நிலையில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக 235 கம்பெனி துணை ராணுவம் விரைவில் தமிழகம் வர உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Read More

தவான்,கோஹ்லி அபாரம்: இந்திய அணி அசத்தல் வெற்றி

தவான்,கோஹ்லி அபாரம்: இந்திய அணி அசத்தல் வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அசத்திய இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அறிமுக போட்டியில் இந்தியாவின் குர்னால் பாண்ட்யா (58 ரன்), பிரசித் கிருஷ்ணா (4 விக்கெட்) வெற்றிக்கு கைகொடுத்தனர். இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி புனேயில் நடந்தது. இந்திய அணியில் குர்னால் பாண்ட்யா, பிரசித் கிருஷ்ணா அறிமுகமாகினர். ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மார்கன் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணிக்கு ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 64 ரன் சேர்த்த போது ரோகித் (28)…

Read More
1 2 3 4