சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக தூக்கிலிடப்படும் பெண் !!
நாடு சுதந்திரம் பெற்ற பின், பெண் குற்றவாளி ஒருவர், முதல் முறையாக தூக்கிலிடப்பட உள்ளார். உத்தர பிரதேசத்தில், இந்த சம்பவம் நடக்கவுள்ளது. உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷப்னம். இவர், சலீம் என்பவரை காதலித்தார். இதற்கு, ஷப்னம் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த, 2008ல், ஷப்னம் வீட்டில், அவரது பெற்றோர் உட்பட ஏழு பேர், கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தனர். ஷப்னத்தின் தொண்டையிலும், கத்தியால் குத்தப்பட்ட காயம் இருந்தது. அவரிடம் போலீசார் விசாரித்த போது, அடையாளம் தெரியாத சிலர், வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி கொலை செய்ததாக, தெரிவித்தார். போலீசார் தீவிரமாக விசாரித்த…
Read More