புதிய உ.பி.,யில் மாபியாக்களுக்கு இடமில்லை – முதல்வர் யோகி ஆதித்யநாத்

புதிய உ.பி.,யில் மாபியாக்களுக்கு இடமில்லை – முதல்வர் யோகி ஆதித்யநாத்

புதிய உ.பி.,யில் மாபியாக்களுக்கு இடமில்லை என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதியாக தெரிவித்துள்ளார். காஸிப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் கூறியதாவது: வளர்ச்சி பணிகளுக்கு தடையாக இருக்கும், மாபியா கலாச்சாரத்தினை ஒழிக்க எனது அரசு தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறது. முந்தைய அரசு, கிரிமினல்களையும், மாபியா கலாசாரத்தையும் வளர்த்ததினால் தான், மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருந்தது. புதிய உ.பி.,யில், மாபியாக்கள், கிரிமினல்கள், சமூக விரோத சக்திகளுக்கு இடமில்லை. வளர்ச்சி பணிகளுக்கு முன்னுரிமை அளிப்பதுடன், மாபியா கலாசாரத்தை ஒழிப்பதிலும் அக்கரை காட்டி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Read More

காலிஸ்தான் பயங்கரவாதி அதரவாளர்களின் டுவிட்டர் கணக்குகளை நீக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு!!

காலிஸ்தான் பயங்கரவாதி அதரவாளர்களின்  டுவிட்டர் கணக்குகளை நீக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு!!

பாகிஸ்தான் ஆதரவு காலிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 1,178 கணக்குகளை உடனே நீக்க வேண்டும் என டிவிட்டர் நிர்வாகத்துக்கு மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள், டில்லி எல்லையில் தொடர்ந்து போராடி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு 11 சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் எட்டப்படாததால் போராட்டம் தொடர்கிறது. போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. சமூக வலைத்தளங்கள் வாயிலாக பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.   இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவதுடன், ஆத்திரமூட்டும் வாசகங்களை பதிவு செய்து வரும் 1178 பாகிஸ்தான் மற்றும்…

Read More