நியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்

நியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்

நியூசிலாந்தில் நடந்த எம்.பி.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் அந்நாட்டின் எம்.பி.,யாக தேர்வாகியுள்ள இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் கவுரவ் சர்மா சமஸ்கிருத மொழியில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். நியூசிலாந்து நாட்டில் நடந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பாக போட்டியிட்ட டாக்டர் கவுரவ் சர்மா அந்நாட்டின் மேற்கு ஹாமில்டன் தொகுதியில் எம்.பி., யாக வெற்றி பெற்றார். இதையடுத்து கடந்த புதனன்று அந்நாட்டு பார்லியில் நடந்த பதவியேற்பு விழாவில் எம்.பி., டாக்டர் கவுரவ் சர்மா சமஸ்கிருத மொழியில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். 33 வயது நிரம்பிய சர்மா நாவ்டானில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். அவர் தனது முகநூல் பதிவில், ‛நான் சமஸ்கிருதத்தை ஆரம்பம் மற்றும் இடைநிலை பள்ளிப்பருவத்திலிருந்து கற்று…

Read More

நிஜ போரை போன்று ராணுவ பயிற்சி செய்யவேண்டும் – சீன அதிபர் உத்தரவு

நிஜ போரை போன்று ராணுவ பயிற்சி செய்யவேண்டும்  – சீன அதிபர் உத்தரவு

மத்திய ராணுவ ஆணைய கூட்டத்தில் பங்கேற்ற சீன அதிபர் ஜி ஜிங்பிங், ராணுவ பயிற்சிகள் நிஜ போரை போன்று இருக்க வேண்டும். எப்போதும் தயார் நிலை தேவை என உத்தரவிட்டுள்ளார். சீனாவின் மத்திய ராணுவ ஆணையம் என்பது 20 லட்சம் வீரர்களை கொண்ட ராணுவத்தின் தலைமை அமைப்பாகும். இதன் தலைவராக அதிபரே உள்ளார். நேற்று (நவ.,25) அவ்வமைப்பின் கூட்டத்தில் ஜி ஜிங்பிங் பங்கேற்றார். உண்மையான போர் நிலைமையை மையமாக கொண்டு பயிற்சிகள் அமைக்கப்பட வேண்டும். போர்களை வெல்லும் திறனை அதிகரிக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தார். முன்னதாக சீன கம்யூனிஸ்ட் கட்சி, தங்கள் நாட்டு ராணுவத்தை 2027-க்குள் அமெரிக்க ராணுவத்துக்கு இணையானதாக மாற்ற திட்டமிட்டுள்ளது….

Read More