உலக நாடுகளுக்கு குறைந்த விலையில் கொரோனா தடுப்பூசி: இந்திய பிரதமர் மோடி

உலக நாடுகள் அனைத்துக்கும் குறைந்த விலையில், எளிதாக கிடைக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகள் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி மற்றும் அதனை செயல்படுத்துவது குறித்த ஆய்வு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. கூட்டத்தில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர், தலைமை அறிவியல் ஆலோசகர், மூத்த விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: கொரோனா தடுப்பூசி தயாரித்து வரும் இந்திய நிறுவனங்களுக்கு வாழ்த்துக்கள். அந்நிறுவனங்களின் முயற்சிக்கு மத்திய அரசு துணை நிற்கும். கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். பரிசோதனைகள் குறைந்த விலையில், முறையாக, துரிதமாக வழங்க வேண்டும்….

Read More

நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் போலீசார் சோதனை !!

நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் போலீசார் சோதனை !!

போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வீட்டில், பெங்களூரு போலீசார் சோதனை நடத்தினர். கன்னட திரையுலகினர் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக, பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில், நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகிணி திரிவேதி உள்ளிட்ட 14 பேர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில், கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்யா ஆல்வா மீதும் குற்றம்சாட்டப்பட்டது. இவர், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயின் உறவினர்(மைத்துனர்) ஆவார். போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணையை துவக்கியதும் ஆதித்யா ஆல்வா…

Read More