பா.ஜ.,விற்கு பிரபலங்கள் படையெடுப்பு : திராவிட கட்சிகள் கலக்கம்

பா.ஜ.,விற்கு பிரபலங்கள் படையெடுப்பு : திராவிட கட்சிகள் கலக்கம்

தமிழக பா.ஜ.,வில், அடுத்தடுத்து பிரபலங்கள் மற்றும் மாற்று கட்சியினர் இணைந்து வருவது, திராவிட கட்சிகளிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை, தமிழக பா.ஜ., அசுர வேகத்தில் செய்து வருகிறது. தற்போது, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்தாலும், தனி ஆவர்த்தனம் செய்ய துவங்கி விட்டது. அனைத்து மாவட்டங்களிலும், மாற்று கட்சியினர், பா.ஜ.,வில் இணைவது, தொடர் கதையாகி வருகிறது. அதேபோல, பிரபலங்களும், பா.ஜ.,வை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். நேற்று நடிகை குஷ்பு, முன்னாள் வருமான வரித்துறை அதிகாரி சரவணகுமார், பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன் ஆகியோர், டில்லி சென்று, பா.ஜ.,வில் இணைந்தனர். காங்கிரசில் இருந்த குஷ்பு,…

Read More

‛பிரைம் டே’ அன்று அமேசான் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

‛பிரைம் டே’ அன்று அமேசான் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

ஆன்லைன் வர்த்தகத்தில் முதன்மை நிறுவனமாக கொடிகட்டி பறக்கும் அமேசானில் சர்ச்சைகளும் எழுவதுண்டு.  தற்போது ஜெர்மனியில் உள்ள ஒரு தொழிலாளர் யூனியன் அமேசான் ஊழியர்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபட வலியுறுத்தியுள்ளது. ஜெர்மனியில் உள்ள 7 அமேசான் குடோன்களில் பணிபுரியும் இந்த ஊழியர்களை ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இந்த தொழிலாளர் யூனியன் வலியுறுத்தியுள்ளது. இன்று அமேசான் பிரைம் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், அமேசான் நிறுவனத்துக்கு சிக்கலை உண்டாக்கியுள்ளது. ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் ‛பிரைம் டே’ தற்போது கொரோனா தாக்கம் காரணமாக கொண்டாட்டம் தள்ளிப் போடப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய போனசை அமேசான் நிறுவனம் வழங்கவில்லை என குற்றம்சாட்டிய இந்த…

Read More