நடிகர் வடிவேல் பாலாஜி மரணம் !!

நடிகர் வடிவேல் பாலாஜி மரணம் !!

பிரபல சின்னத்திரை நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி சென்னையில் இன்று காலமானார் அவருக்கு வயது 45 . வடிவேல் பாலாஜிக்கு கடந்த 15 தினங்களுக்கு முன்பு நெஞ்சு வலி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பாலாஜியின் இரு கைகளும் செயலிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், சென்னையிலேயே மற்றொரு தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கும் எந்த முன்னேற்றமும் இல்லாததால், ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் அவரை சேர்க்க அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். இந்த நிலையில் தான், இன்று…

Read More

சிவசேனா அல்ல ‛சோனியா சேனா’: நடிகை கங்கனா ரணாவத்

சிவசேனா அல்ல ‛சோனியா சேனா’: நடிகை கங்கனா ரணாவத்

சிவசேனா, நடிகை கங்கனா ரனாவத் இடையிலான மோதல் போக்கின் உச்சமாக, நடிகையின் அலுவலகம் நேற்று இடிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கங்கனா, பால் தாக்கரே, கட்சியைக் கட்டியெழுப்பிய சித்தாந்தம், அதிகாரத்திற்காக விற்கப்பட்டதாகவும், சிவசேனா கட்சியை ‛சோனியா சேனா’ எனவும் கூறியுள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மர்ம மரணம் தொடர்பான வழக்கில், பாலிவுட் பிரபலங்கள் பலரும் கருத்துத் தெரிவித்தனர். பாலிவுட்டில் இருக்கும் போதைப் பொருள் கும்பல் குறித்தும், திரைமறைவில் இருக்கும் மாபியாக்கள் குறித்தும் சமீபத்தில் நடிகை கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்துப் பேசினார். மேலும், ‛மும்பை போலீசார் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை’ எனவும், ‛மும்பை பாதுகாப்பற்ற நகரம்’ எனவும் விமர்சித்திருந்தார். இதனால் அவருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும்…

Read More