2018 கால்பந்து: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிரான்ஸ்

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் பிரான்ஸ் – பெல்ஜியம் இடையே நடந்த அரை இறுதி உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் பெல்ஜியம் தோல்வி அடைந்ததை அடுத்து, இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது பிரான்ஸ்.

இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அல்லது குரேஷியா அணிக்கு எதிராக பிரான்ஸ் விளையாடும். 1966 ஆம் ஆண்டுக்கு பின் இப்போதுதான் இந்த மூன்று அணிகளும் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்திற்கான போட்டியில் உள்ளன.

பெல்ஜியம் கடுமையாக விளையாடி முன்னேறி வந்தது. கால் இறுதியில் முன்னாள் உலக சாப்பியனாக இருந்த பிரேசிலை வீழ்த்தி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஆனால், அந்த மாயாஜாலம் அரை இறுதியில் நிகழவில்லை.

2018 கால்பந்து: பெல்ஜியம், குரேஷியா ஆதிக்கம் செலுத்துவது எப்படி?
2018 கால்பந்து: பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து வெற்றிக்கு உதவிய குடியேறிகள்
அரை இறுதி போட்டியில் தோல்வி அடைந்திருந்தாலும் பெல்ஜியம் அணிக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவே கூறுகிறார் பெல்ஜியம் அணியின் மேலாளர் ராபர்டோ மார்டினஸ். அவர், “பெல்ஜியம் அணியில் மிகத் திறமையான இளம் வீரர்கள் இருக்கின்றனர்” என்கிறார்.

படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இதுவரை எந்த பெரிய போட்டிகளிலும் வெல்லாத பெல்ஜியம் அணி, ரஷ்யாவில் நடந்துவரும் இந்த உலகக் கோப்பை போட்டியில் வியத்தகு வகையில் விளையாடியது.

அரை இறுதியில் தோற்றிருந்தாலும் இந்த உலகக்கோப்பையில் சிறப்பாகவே விளையாடியது பெல்ஜியம். இதற்கு என்ன காரணம், எப்படி அவர்களால் சாதிக்க முடிந்தது என்பதற்கு பதில் தருகிறார், பிபிசி உலக சேவையின் பெர்னாண்டோ டுவார்ட்.

”கால்பந்தைக் கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒப்புக்கொள்”: சாதிக்கும் தமிழ்பெண்கள்
2018 உலகக்கோப்பை: அர்ஜென்டினாவை பிரான்ஸ் வெளியேற்றியது எப்படி?
அவர், ” பெல்ஜியத்தில் வளம் என்பது பணமும், விளையாட்டின் புகழும் ஆகும். உலகின் முதல் 20 பணக்கார நாடுகளில் ஒன்றாக பெல்ஜியம் உள்ள நிலையில், பெல்ஜியம் மக்கள் தங்கள் விளையாட்டை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கின்றனர். 2010 கணக்கின்படி பெல்ஜியத்தில் 17,000 கால்பந்து கிளப்புகள் உள்ளன. இதில் கிட்டதட்ட 1.35 மில்லியன் பேர் உறுப்பினராக உள்ளனர். இது அந்நாட்டு மக்கள் தொகையில் 10 சதவீதமாகும்.” என்று குறிப்படுகிறார்.