- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்

2 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவை அறிய உதவும் கிட்: ரிலையன்ஸ் அறிமுகம்
2 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவை அறிய உதவும் ‛கிட்’ டினை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
நாட்டில் கொரோனா பரவும் சூழலில் பரவலை கட்டுப்படுத்த கொரோனா பரிசோதனைகள் அவசியமாகிறது. மத்திய மாநில அரசுகள் ஒவ்வொரு நாளும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றன. தற்போது COVID-19 RT-PCR கி்ட்டுகள் வாயிலாக நடத்தப்படும் இத்தகைய பரிசோதனைகளின் முடிவுகளை அறிய 24 மணி நேரம் வரை ஆகிறது.
ஆனால், ரிலையன்ஸ் துணை நிறுவனமான ரிலையன்ஸ் லைப் சயன்ஸ் நிறுவனம் புது வகையான கிட் ஒன்றினை வடிவமைத்துள்ளது. கொரோனா வைரஸின் 100க்கும் மேற்பட்ட மரபுக் கூறுகளை ஆராய்ந்து தனித்துவம் வாய்ந்த தொழில் நுட்ப உதவியுடன் உள்நாட்டிலேயே இந்த கிட் தயாரிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் லைப் சயன்ஸ், இதற்கு ‛ஆர்-கிரீன் கிட்’ என்று பெயரிட்டுள்ளது. இந்த கிட் கொரோனா வைரஸின் இ-ஜீன், ஆர்-ஜீன், ஆர்டி ஆர்பி ஜீன்களை கண்டறிந்து செயல்படக் கூடியவை. இச் சோதனை கிட்டிற்கு ஐ.சி.எம்.ஆர்., இன்னும் சான்று அளிக்கவில்லை. இருப்பினும் இதை கையாள்வது மிகவும் எளிது. 98.8 சதவீதம் துல்லியமான முடிவுகளை இதன் மூலம் அறியலாம் என்று ரிலையன்ஸ் துணை நிறுவனம் தெரிவித்துள்ளது.