18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் விருதினைப் பெறும் கவிஞர் என். சிவகுமாரன் கனடா வந்துள்ளார்

நாளை மறுநாள் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுறோ நகரில் நடைபெறவுள்ள தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் விருதினைப் பெறும் கவிஞர் என். சிவகுமாரன் கனடா வந்துள்ளார். ஸ்காபுறோ கொன்வென்சன் சென்றர் மண்டபத்தில் நடைபெறவுள்ள மேற்படி விழாவில் இலக்கியம் மற்றும் மொழி சார்ந்த துறைகளில் சாதனை செய்தவர்கள் சிலருக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளன. இங்கே காணப்படும் படத்தில் நேற்று மாலை பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கிய கவிஞர் என். சுகுமாறன் மற்றும் அவரது பாரியார் ஆகியோரை தமிழ் இலக்கியத் தோட்டத்தின் முக்கிய பிரமுகரும் எழுத்தாளருமான அ. முத்துலிங்கம் மற்றும் “காலம்” சஞ்சிகையின் ஆசிரியர் திரு செல்வம் அருளானந்தம் ஆகியோர் வரவேற்பதை காணலாம்.