16வது சிறுமி கிரேட்டா துன்பர்க்கின் படத்தை அட்டையில் வெளியிட்டு டைம் இதழ்

பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடிய சுவீடனை சேர்ந்த 16வது சிறுமி கிரேட்டா துன்பர்க்கின் படத்தை அட்டையில் வெளியிட்டு டைம் இதழ் பெருமைப்படுத்தி உள்ளது.

 

 

ஆண்டுதோறும் சிறப்புமிக்கவர்களின் புகைப்படங்களை அட்டைப்படத்தில் வெளியிட்டு டைம் இதழ் பெருமைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த வரிசையில் கிரேட்டா இடம் பெற்று உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளார். பருவ நிலை தொடர்பான பல்வேறு பிரச்சினைகளில் குரல் எழுப்பத் தயங்காதவர் கிரேட்டா.
செப்டம்பர் மாதத்தில் நியூயார்க் நகரில் நடந்த பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா., கூட்டத்தில் 2018 ம் ஆண்டு இவர் ஆற்றிய உரை உலக நாடுகளால் பாராட்டப்பட்டது. அட்லான்டிக் கடல்பகுதியில் சுமார் 14 நாட்கள் பயணித்த தனது அனுபவம் குறித்து இவர் அந்த மாநாட்டில் பேசினார்.

 

சூழலியல் தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்பதில் அவர் ஈடுபாடு காட்டி வந்தார். கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியேற்றத்தால் பூமியின் சூழல் நச்சுத்தன்மை கொண்டு வருவதை தமது தொடர் போராட்டத்தாலும் எதிர்த்து வருகிறார் கிரேட்டா. ஸ்வீடன் நாடாளுமன்றத்தின் முன்பு தன்னந்தனியாக அமர்ந்து போராடினார். ஓராண்டில் சமூக ஊடகங்கள் வழியாக அவருடைய இயக்கம் பல லட்சம் பேரின் ஆதரவை பெற்றுள்ளது.