- காங்., தலைவர்களே தடுப்பூசிக்கு எதிராக பிரசாரம்; மன்மோகனுக்கு ஹர்ஷ்வர்தன் பதில்
- நடிகர் விவேக் உடல்நிலை மோசம்: தொடர்ந்து எக்மோ சிகிச்சை
- அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் பலி
- நீதிபதிகள் மீது பொய் புகார் உச்ச நீதிமன்றம் கண்டனம்
- விடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது !!

127 இலங்கை அகதிகள் மலேசியாவில் கைது – விசாரணை ஆரம்பம் என இலங்கை அரசாங்கம் அறிவிப்பு
வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், அந்நாட்டு அதிகாரிகளுடன் நேரடி கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 131 பேரின் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் ஊடாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, கைது செய்யப்பட்டவர்களில் 43 பேரிடம் ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் தொடர்பான உயர்ஸ்தானிகராலயத்தினால் விநியோகிக்கப்பட்ட அடையாள அட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மலேசியாவில் கடந்த முதலாம் தேதி இலங்கையர்கள் என நம்பப்படும் 131 பேர் கைது செய்யப்பட்டதாக மலேசியாவிற்கான போலீஸ் சிறப்பு பிரிவு இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்திருந்தது.
இவர்களில் 127 பேர் 1959ஆம் ஆண்டு 63ஆம் இலக்க குடிவரவு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
எஞ்சிய 4 பேரும் ஆட்கடத்தல் வர்த்தகம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கத்தினால், இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நோக்கி பயணிக்கும் நோக்குடன் கப்பலொன்றில் பயணித்த 131 பேர் மலேசிய கடற்பரப்பில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 98 ஆண்களும், 24 பெண்களும், 9 சிறுவர்களும் அடங்குவதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.