- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

10 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக வழக்கு
பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு, பொதுப் பிரிவில், 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், பொதுப் பிரிவில், 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை, மத்திய அரசு தயாரித்துள்ளது. இந்த மசோதாவுக்கு சமீபத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து இந்த மசோதா பார்லிமென்ட் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமநிலைக்கான இளைஞர் அமைப்பு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.