- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

1 ரூபாய்க்கு ‘சானிட்டரி நாப்கின்’
பெண்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள, மலிவு விலை மருந்தகங்களில், 1 ரூபாய்க்கு, ‘சானிட்டரி நாப்கின்’கள் விற்பனை செய்ய, இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர், மான்சுக் மாண்டவியா, டில்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெண்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், சில திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. நாடு முழுவதும், மத்திய அரசால், ‘ஜன் அவுஷாதி’ எனப்படும், மலிவு விலை மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த மருந்தகங்களில், மிக குறைந்த விலையில், சானிட்டரி நாப்கின்களை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, ஒரு சானிட்டரி நாப்கின், 2.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இனி, மலிவு விலை மருந்து கடைகளில், இது, 1 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.
நான்கு நாப்கின்கள் அடங்கிய பாக்கெட், தற்போது, 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது; இனி, 4 ரூபாய்க்கு விற்கப்படும். கடந்த லோக்சபா தேர்தலின் போது, பா.ஜ., அளித்த வாக்குறுதிகள் அனைத்தும், வரிசையாக, ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அவற்றில், இதுவும் அடக்கம். இவ்வாறு, அவர் கூறினார்.