ஹௌஸ்டன் நகரில் உள்ள சீன தலைமையகத்தை வரும் ஜூலை 24-ம் தேதிக்குள் மூட அமெரிக்கா உத்தரவு

அமெரிக்காவின் ஹௌஸ்டன் நகரில் சீனா உட்பட பல நாடுகளின் வர்த்தக மற்றும் அரசியல் தலைமையகங்கள் உள்ளன. இங்கு அமெரிக்காவுடனான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்படும். தற்போது சீன-அமெரிக்க மோதல் போக்கு காரணமாக ஹௌஸ்டன் நகரில் உள்ள சீன தலைமையகத்தை வரும் ஜூலை 24-ம் தேதிக்குள் மூட அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. இது சீனாவுக்கு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவல் தொடங்கி ஹாங்காங் கையகப்படுத்தும் சீனாவின் திட்டம் வரை சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் கடந்த சில நாட்களாக கடும் மோதல் போக்கு நீடித்து வருவது அனைவருக்கும் தெரியும். சீனாவை எப்படியாவது பழிவாங்க அமெரிக்கா முயன்று வருகிறது. இதற்காக அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் சீனா ஹாங்காங்குடனான வர்த்தகத் தொடர்பை துண்டித்தது. இதனைத்தொடர்ந்து தற்போது இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

சர்வதேச ஒப்பந்தத்தைமீறி அமெரிக்கா செயல்படுவதாக சீன வெளியுறவுத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. சீனாமீது உள்ள தனிப்பட்ட விரோதம் காரணமாக இவ்வாறு சர்வதேச ஒப்பந்தத்தை மீறுவது நியாயமல்ல என சீனா தெரிவித்துள்ளது. சமீபத்தில் ஏற்பட்டுள்ள தென் சீன கடல் மோதல் விவகாரத்தில் அமெரிக்கா சீனாமீது மேலும் கோபத்தில் உள்ளது. சீனா அருகே உள்ள தைவான் உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா ஆயுத சப்ளை செய்து வருவதாக சீனா முன்னதாக குற்றம்சாட்டியது.

சீனாவுக்கு எவ்வாறெல்லாம் அழுத்தம் கொடுக்க முடியும் என கணித்து அமெரிக்கா திட்டமிட்டு ஒவ்வொன்றாக அமல்படுத்தி வருகிறது என சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் வாங் கூறியுள்ளார். சீனாவின் ஜிங்ஜியாங் மாகாணத்தில் சிறுபான்மையினர் ஒடுக்கப்படுவதாக அமெரிக்கா முன்னதாக குற்றம்சாட்டியது. இவ்வாறாக சீனாவுக்கு தொடர்ந்து உள்நாட்டு பிரச்னைகளைத் தூண்டுவதில் அமெரிக்கா மும்முரம் காட்டி வந்தது. தற்போது அமெரிக்கா சர்வதேச ஒப்பந்தத்தை மீறி உள்ளதாக சீனாவால் குற்றம் சாட்டப்படுகிறது.

ஹௌஸ்டன் மாகாணத்தில் உள்ள சீன நிர்வாக கட்டிடத்தை மூட அமெரிக்கா 72 மணி நேரம் கெடு விதித்துள்ளதாக சீனாவின் கம்யூனிச அரசு பத்திரிகையான குளோபல் டைம்ஸ் பத்திரிகையின் தலைமையாசிரியர் ஹூ ஜிங் தெரிவித்துள்ளார். இது மிகவும் குறுகிய கால அவகாசம் என்றுள்ளார். இதுகுறித்து அவர் காரசாரமாக தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவின் இந்த தொடர் அத்துமீறலுக்கு சீனா தக்க பதிலடி கொடுக்கும் என அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.