ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்?- மத்திய அமைச்சர் யோசனை

புதுக்கோட்டை மாவட்டம் நெடு வாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து, தமிழக அரசு, பொதுமக் களின் கருத்தைக் கேட்டு, அத்திட்டம் வேண்டாம் என மத் திய அரசுக்கு அறிக்கை அளித் தால் திட்டம் கைவிடப்படும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரி வித்தார்.
புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறிய தாவது: குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டா லும், பாஜக சார்பில் அறிவிக் கப்பட்டுள்ள வேட்பாளர் வெற்றி பெறுவார்.
கூவத்தூரில் நடைபெற்ற சம்ப வம் மற்றும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நடைபெற்ற பணப் பரிமாற்றம் குறித்தும் விசாரிக்கப் பட வேண்டும். சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர் மானத்தின்போது நடைபெற்ற கலவரம் குறித்தும் விசாரிக்க வேண்டும்.
தமிழக கல்வித்துறை அமைச் சரின் செயல்பாடு பாராட்டும் விதமாக அமைந்துள்ளது. இத் தகைய நடவடிக்கைகளை முன் கூட்டியே எடுத்திருந்தால், தமிழ கம் கல்வியில் மேம்பட்டிருக்கும்.
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து, தமிழக அரசு, மக்கள் கருத்துக்கேட்புக் கூட் டத்தை நடத்தி, திட்டம் தேவை யில்லை என்று முடிவெடுத்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்தால் அந்த திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என்று அவர் கூறினார்.