- தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட டாக்டர் கபீல் கான் விவசாயிகள் டிராக்டர் பேரணி கலவரத்தில் பங்கேற்றாரா ?
- முத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்குப் போய் அங்கு வழங்கப்பட்ட விபூதியை பூசிக் கொள்ளாமல் கீழே கொட்டி அவமானப்படுத்திய ஸ்டாலின்
- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை உட்கொண்ட பிறகு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆரோக்கியமாக உணர்கிறார் – வெள்ளை மாளிகை
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை உட்கொண்ட பிறகு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆரோக்கியமாக உணர்கிறார் என வெள்ளை மாளிகை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மலேரிய தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொரோனாவை தடுப்பதற்கும் பயன்படுத்த முடியும் என்று டிரம்ப் கூறியிருந்தார். இதனையடுத்து, இம்மருந்து உண்மையில் கொரோனாவை குணப்படுத்துமா என உலக நாடுகள் ஆராய்ச்சியில் இறங்கின. ஆனாலும், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தோ அல்லது வேறு ஏதேனும் தடுப்பு மருந்தோ, கொரோனாவை குணப்படுத்தும் என இதுவரையில் நிரூபிக்கப்படவில்லை. மாறாக, இது கொரோனாவை தடுக்காது, இதயப் பிரச்னையை ஏற்படுத்தும் என சில ஆய்வுகள் கூறின.
இதற்கிடையே, இரண்டு வாரங்களாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை உட்கொண்டு வருவதாக, டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில், அம்மருந்தை உட்கொண்ட பிறகு டிரம்ப், உடல் ரீதியாக ஆராக்கியமாக உணர்வதாக வெள்ளை மாளிகை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அமெரிக்காவில் உள்ள ஹென்றி போர்டு மருத்துவமனையில் 3000 சுகாதரப் பணியாளர்கள் பரிசோதனைக்காக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை உட்கொண்டு வருவதாகவும், அது எதிர்பார்த்த பலனை அளிப்பதாகவும் வெள்ளை மாளிகை செய்தி தொடர்புசெயலர் மெக்கெனானி தெரிவித்துள்ளார்.