ஹெச்.ராஜா விளக்கம் ஏற்புடையதல்ல; நடவடிக்கை குறித்து கட்சி முடிவெடுக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன்

பெரியார் சிலை குறித்த பதிவுக்கு ஹெச்.ராஜா அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை. அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி முடிவு செய்யும் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேசும்போது, ”திரிபுராவில் நடந்த சிலை அகற்றுதல் நிகழ்ச்சி, தமிழகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிற பெரியார் சிலைக்கு ஏற்பட்ட அவமானம். இதை எல்லாம் பார்க்கும்போது பாஜக கட்சி வேதனை அடைகிறது.

இந்தச் செயல்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் பாஜக ஏற்றுக் கொள்ளாது என்பதை பிரதமரும், பாஜக தலைவர் அமித்ஷாவும் தெளிவுப்படுத்தியுள்ளனர். ஜனநாயகத்துக்கு எதிரான நிலையில் எவருடைய சிலையையும் யார் அவமானப்படுத்தினாலும் அதை பாஜக ஏற்றுக் கொள்ளது. அது பாஜவின் நிலைப்பாடு இல்லை.

பெரியார் சிலை குறித்த பதிவுக்கு ஹெச்.ராஜா அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை. அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி முடிவு செய்யும் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.
அவ்வாறு செயல்படுபவர்கள் பாஜக கட்சிக்கு எதிராகத்தான் செயல்படுகிறார்கள் என்பதை பாஜக உணர்கிறது என்பதை அவர்கள் உணர வேண்டும்.

ஹெ.ராஜாவின் விளக்கம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. காலதாமதமாகவும் உள்ளது. ஹெச்.ராஜாவின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி முடிவு செய்யும்” என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.