‘ஹிந்தி தெரியாது போடா’ பதில் ‛திமுகவேணாம்போடா’ – திமுக மொழி அரசியல் மண்ணை கவ்வுதா ?

‛ஹிந்தி தெரியாது போடா’ என்ற ஹேஷ்டேக்கிற்கு பதிலடியாக, சமூக வலைதளங்களில் ‛திமுகவேணாம்போடா’ என்ற ஹேஷ்டேக் வைரலானது. No:1 ட்ரெண்டிங் #திமுகவேணாம்போடா #திமுக அடித்த பந்து அதே வேகத்தில் திரும்ப அடித்தவர்கள் பக்கமே வேகமா போய்க்கொண்டு இருக்கிறதா?

கடந்த சில நாட்களுக்கு முன்னர், சென்னை விமான நிலையத்தில், இந்தி தெரியாது எனக்கூறிய, திமுக எம்.பி., கனிமொழியை , அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிஐஎஸ்எப் அதிகாரி ஒருவர் நீங்கள் இந்தியரா என கேள்வி எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.