- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

ஹபீஸ் சயீத் விடுதலை: பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்
தீவிரவாதி ஹபீஸ் சயீத்தை விடுதலை செய்யும் பாகிஸ்தானின் முடிவுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மும்பையில் 2008-ம் ஆண்டு நடந்த தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட ஹபீஸ் சயீதை ஐ.நா., மற்றும் அமெரிக்கா பயங்கரவாதி என்று ஏற்கெனவே அறிவித்துள்ளது. பாகிஸ்தானில், கடந்த ஜனவரி முதல் வீட்டுக்காவலில் ஹபீஸ் சயீத் இருந்து வருகிறார். அவரது வீட்டுக்காவல் உத்தரவு வெள்ளிக்கிழமை இரவுடன் முடிவடைகிறது. அவரை விடுதலை செய்யுமாறு, லாகூர் உயர் நீதிமன்றத்தின் நீதி மறுசீராய்வு வாரியம் உத்தரவிட்டது.
இதற்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
‘‘ஐநாவும், அமெரிக்காவும் பயங்கரவாதி என அறிவித்த ஒருவரை விடுதலை செய்யும் பாகிஸ்தானின் முடிவு கண்டனத்துக்குரியது. தீவிரவாத விஷயத்தில் பாகிஸ்தான் உறுதியுடன் இல்லை என்பதையே இது காட்டுகிறது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது’’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.