ஸ்ரீதேவியும் ஜெயலலிதாவும் கடைசி பதிவு

மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஜெயலலிதா வாழ்வில் நடந்த நிகழ்வு இருவருக்கும் உள்ள அன்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. ஜெயலலிதா பிறந்த நாளில் ஸ்ரீதேவி ப மறைந்த தற்செயல் நடந்துள்ளது.

நடிகை ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்தது முதல் ஜெயலலிதாவை அறிவார். இருவருக்கும் இடையே ஒருவித அன்பு உண்டு. சினிமா நூற்றாண்டு விழா சென்னையில் நடந்தபோது ஸ்ரீதேவி அதில் கவுரவிக்கப்பட்டார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு ஸ்ரீதேவி அவருடன் தான் நடித்த படத்தைப்பற்றிய நினைவுகளோடு குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அவரது ட்விட்டரில் வெளிப்படையான, கண்ணியமிக்க, பண்பாடுமிக்க, அரவணைத்துச் செல்லக்கூடிய தலைவர். அவருடன் பணியாற்றியது என் அதிர்ஷ்டம் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஸ்ரீதேவி 1971-ம் ஆண்டு தான் குழந்தை நட்சத்திரமாக ஜெயலலிதாவுடன் முதன்முதலில் நடித்த ஆதிபராசக்தி படத்தில் சக்தியாக நடித்த ஜெயலலிதா மடிமீது பாலமுருகனாக நடித்த தாம் அமர்ந்திருந்த போட்டோவை பதிவு செய்திருந்தார்.

லட்சக்கணக்கான மக்கள் நேசிக்கும் அன்பும், அரவணைப்பும் உடைய தலைவியை இழந்துவிட்டோம், ஜெயலலிதா அம்மாவுக்கு இரங்கல் என்று குறிப்பிடிருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின் தனது கணவர் போனி கபூருடன் போயஸ் இல்லம் சென்று சசிகலாவை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.

ஜெயலலிதா மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த ஸ்ரீதேவி நேற்று ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 அன்று மறைந்தது குறிப்பிடத்தக்கது.