ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் தற்போது நடைபெற்று வரும் வருடாந்த உற்சவத்தின் 8ம் திருவிழா

ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் தற்போது நடைபெற்று வரும் வருடாந்த உற்சவத்தின் 8ம் திருவிழாவான மாலை சங்கீத உற்சவம் நடைபெற்றது. ரொரென்ரோவின் மூத்த மற்றும் இளைய தலைமுறை இசைக் கலைஞர்கள் மற்றும் வாத்திய இசை விற்பன்னர்கள் ஆகியோர் இணைந்து வழங்கிய இசை ஆராதனை 7.30 மணிக்கு ஆரம்பமானது.

ஒரு பக்கம் வாத்தியக் கலைஞர்களும் மறுபக்கத்தில் வாய்ப்பாட்டுக் கலைஞர்களும் அமர்ந்திருந்து நடத்திய இசை ஆராதனை சங்கீதத்தின் இனிமையையும் உருகிப் பாடும் கலைஞர்களின் பக்தி ரசத்தையும் சேர்த்து அனுபவிக்கக் கூடியமாக இருந்தது.

ஆலயத்தின் பிரதம குரு சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் மற்றும் சிவஶ்ரீ சோமஸ்க் கந்தக் குருக்கள் ஆகியோர் விசேட வழிபாடுகளை நடத்திய பின்னர் இசை மற்றும் வாத்தியக் கலைஞர்களை வாழ்த்தி அவர்களுக்காய் பிரார்த்தனை செய்ய, தொடர்ந்து இசை ஆராதனை இடம்பெற்றது.
தொடர்ந்து விநாயகப் பெருமான் வீதி வலம் வந்த காட்சி அனைவரையும் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தியது.