ஸ்காபுரோ ரூச் பார்க் தொகுதியில் கொன்செர்வேர்ட்டிவ் கட்சி வேட்பாளர் விஜய் தணிகாசலம்

எதிரவரும் யூன் மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ள ஒன்ராரியோ மாகாண பாராளுமன்றத் தேர்தலில் 15 ஆண்டுகால லிபரல் ஆட்சியில் அனுபவித்த துயரங்களால் ஒன்ராரியோ மாகாணம் தழுவி மாற்றம் ஒன்றை மக்கள் விரும்புவதை அனைத்து மக்கள் கருத்துக்கணிப்புகளும் தொடர்ச்சியாக காட்டி நிற்கின்றன. அந்தவகையில் ஸ்காபுரோ ரூச் பார்க் தொகுதியின் மாற்றத்தின் பிரதிநிதியாக கொன்செர்வெர்ட்டிவ் கட்சியின் வேட்பாளர் இளையவர் விஜய் தணிகாசலம் தொகுதி வாக்காளர்களின் மனங்களில் உயர்ந்து நிற்கின்றார்.

இத்தேர்தல் கனடியத் தமிழர்களுக்கு வரலாற்றிலேயே முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாகும். கனடிய பாராளுமன்றத்திற்கு இரு தமிழர்களை அனுப்பிய பெருமை ரொரன்ரோ கல்விச்சபை மற்றும் ரொரன்ரோ மாநகரசபைக்கு முதற் தமிழரை தெரிவு செய்து வரலாறு படைத்த பெருமையும் ரூச் பார்க் தொகுதியையே சாரும்.

கனடிய பாhராளுமன்றமே சென்றுவிட்ட ஈழத்தமிழினத்தால் தாம் அதிகம் வதியும் கனடாவின் பெரு மாகாணமான ஒன்ராரியோ மாகாணப் பாராளுமன்றத் தேர்தலில் இதுவரை வெற்றி பெற முடியாமலே போனது. இந்நிலையிலேயே வரும் யூன் 7ஆம் திகதி நடைபெறவுள்ள ஒன்ராரியோ பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலில் ரூச் பார்க் தொகுதியில் வேட்பாளராக் களம் காணுகிறார் இளையவர் விஜய் தணிகாசலம். மாணவர் மற்றும் இளையோர் செயற்பாடுகளினூடாக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்தமிழ் சமூகத்திற்கு நன்கு அறிமுகமானவர் விஜய்.

இவ்வாறாக ஒன்றாரியோ தேர்தல்களத்தில் உள்ள 30 வயது நிரம்பிய விஜய் தணிகாசலத்திற்கு ஒரே சமூகமாக வெற்றிபெறக்கூடிய வாய்ப்புள்ள ஒரே தமிழர் என்றரீதியில் வாக்குகளை சிதறடிக்காது ரூச் பார்க் வாழ் தமிழ் மக்கள் அனைவரும் ஒரே அணியில் திரண்டு விஜய்க்கு வாக்களித்து மேலும் ஒரு வரலாற்றைப் படைப்போம்.

ரூச் பார்க் தொகுதியில் வாழும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் வாக்காளர்களுக்கும் மேலும் ஒரு வரலாற்றுக் கடமை எழுகிறது. வரும் தேர்தலில் தவறாது வாக்களித்து விஜய் தணிகாசலத்தின் பெரு வெற்றியை உறுதி செய்வது. மேலதிக உதவிகள் தகவல்கள் தேவைப்பட்டால் விஜயின் தேர்தல் அலுவலகத்துடன் 647-367-9179 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.