ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயததின் இவ்வருட ஆடிவேல் உற்சவம்

கனடா பிரம்டன் மாநகர் ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயததின் இவ்வருட ஆடிவேல் உற்சவத்தினை முன்னிட்டு கனடா ரெக்னோ மீடியா நிறுவனத்தின் பிரதம அனுசரைணையுடன் நடைபெற்ற “ஆடிவேல் இசை மாலை” நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மிசிசாகா மாநகரில் உள்ள ஜோன் போல் 11 போலந்து கலாச்ச்சார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மெகா ரியுனர்ஸ் இசைக்குழுவினரின் பக்கவாத்திய இசையில் தமிழ்நாட்டின் பிரபல இளம் பாடகர்கள் (சுப்பர் சிங்கர்ஸ் புகழ்) சோனியா, நிக்கில் மத்யூ, இராஜ கணபதி மற்றும் மதுமிதா ஆகியோர் கலந்து கொண்டு இனிய பாடல்களை வழங்கினார்கள்.
உள்நாட்டுப் பாடகர் பிரபா பாலகிருஸ்ணன் உட்பட பலர் இணைந்து பாடல்களை வழங்கினார்கள்.
நடன ஆசிரியை திருமதி ஜனனி குமார் அவர்களின் மாணவிகள் மற்றும் பிறிமா டான்ஸ் பாடசாலை மாணவ மாணவிகள் ஆகியோரின் முறையே பரத நாட்டியம் மற்றம் திரை இசை நடனம் ஆகியனவும் இடம்பெற்றன.
மேற்படி நிகழ்ச்சியின் மூலம் சேகரிக்கப்பட்ட 1000 டாலர்கள் கனடாவில் இயங்கும் சுழிபுரம் விக்ரோரியாக் கல்லூரியின் பழைய
மாணவர்கள் சங்கத்தின் மூலம் கல்லூரியின் அபிவிருத்தி வேலைகளுக்கு கையளிக்கப்பட்டன. அதனை கனடா பிரம்டன் மாநகர் ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயததின் தர்மகர்த்தா சபைத் தலைவர் திரு விஜயநாதன், சுழிபுரம் விக்ரோரியாக் கல்லூரியின் அபிவிருத்தி சங்கம்- கனடா அங்கத்தவர்களிடம் வழங்கினார்.
இசை நிகழ்ச்சியை வண்ணத்தமிழ் வானொலி அறிவிப்பாளர்கள் சுதாகரன் மற்றும் சக பெண் அறிவிப்பாளர் ஆகியோர் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்கள்.