- தலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் ?
- உலகம் செய்தி 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை
- பெட்ரோல், டீசல் விலை குறித்து மோடி ஏன் பேசுவதில்லை
- நக்சல்களிடம் சிக்கிய சிஆர்பிஎப். வீரர் விடுதலை: குடும்பத்தினர் மகிழ்ச்சி
- ஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு: தலைவர்கள் வலியுறுத்தல்

வைகுண்ட ஏகாதசி: சொர்க்க வாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி, திருச்சி ஸ்ரீரங்கம், சென்னை திருவல்லிக்கேணி உள்ளிட்ட பெருமாள் கோவில்களிலும் இன்று (29ம் தேதி) அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. கோவில்களில் கோவிந்தா கோஷத்துடன் மக்கள் பக்தி பரவசத்தில் மூழ்கினர்.
மார்கழி மாதம் மூன்றாம் நாள், (கடந்த 18ம் தேதி) முதல், ‛பகல் பத்து’ உற்சவம் துவங்கியது. நேற்றுடன் அது நிறைவடைந்தது. இந்நிலையில் இன்று முதல், ராப்பத்து உற்சவம் நடைபெறுகிறது. இந்நாளில் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது.
மாதந்தோறும் கடை பிடிக்கப்படும் ஏகாதசியில் உபவாசமிருந்து, பெருமாளை பக்தர்கள் வணங்குவர். மார்கழி மாதம் வரும் ஏகாதசி வைகுண்டத்தில் பின்பற்றப்படும் ஏகாதசி. அதனால் பூலோகத்தில் அன்று ஒரு நாளைக்கு மட்டும் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அதன் வழியே பக்தர்கள் கடந்தால் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம். அதனால் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவில், உள்ளிட்ட அனைத்து வைணவ கோவில்களிலும் இன்று(29ம் தேதி) அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஏராளமான மக்கள் பக்திப் பரவசத்துடனும், ‛கோவிந்தா.. கோவிந்தா’ என பரவசத்துடனும் சுவாமி தரிசனம் செய்தனர்.