- தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட டாக்டர் கபீல் கான் விவசாயிகள் டிராக்டர் பேரணி கலவரத்தில் பங்கேற்றாரா ?
- முத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்குப் போய் அங்கு வழங்கப்பட்ட விபூதியை பூசிக் கொள்ளாமல் கீழே கொட்டி அவமானப்படுத்திய ஸ்டாலின்
- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். அப்போது, அமெரிக்காவின் அறிவியல், மருத்துவம், தொழில் மற்றும் கல்வியில் ஆற்றிய பங்கிற்காக இந்திய வம்சாவளியினருக்கு பாராட்டு தெரிவித்தார்.
அமெரிக்க அதிபராக ஜார்ஜ் புஷ் இருந்த காலம் முதல் வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அப்போது மாளிகையில் உள்ள அறை ஒன்றில் நடக்கும் விழாவில் புஷ் கலந்து கொண்டது இல்லை. ஆனால், கடந்த 2016ல் அதிபராக ஒபாமா இருந்த போது, வெள்ளை மாளிகையில் உள்ள கிழக்கு அறையில் தீபாவளி கொண்டாடப்பட்டது. ஒபாமா குத்துவிளக்கேற்றி தீபாவளியை கொண்டாடினார்.
அதேபோல், இந்த வருடம், வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நடந்த தீபாவளி பண்டிகையில், அதிபர் டிரம்ப் உடன், நிக்கி ஹாலே மற்றும் அமெரிக்க அரசில் உயர் பதவியில் இருக்கும் இந்திய வம்சாவளியினர். அமெரிக்க தொலை தொடர்பு குழு தலைவர் அஜித் பை, அதிபரின் முதன்மை துணை பத்திரிகை செயலர் ராஜ் ஷா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை டிரம்ப் தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.கொண்டாட்டத்தின் போது டிரம்ப் கூறியுதாவது: தீபாவளியை கொண்டாடும் இந்த நேரத்தில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், இந்து மத நம்பிக்கையின் தாயகமாகவும் திகழும் இந்தியாவையும், அந்நாட்டு மக்களையும் நினைவு கூர்கிறோம். பிரதமர் மோடியுடன் சிறந்த நட்புறவு உள்ளது. தீபாவளி கொண்டாட்டத்தில், நிர்வாக அதிகாரிகள், இந்திய வம்சாவளியினருடன் இணைவதில் பெருமைப்படுகிறேன். அமெரிக்க வாழ் இந்தியர்கள் நமது நாட்டிற்காக ஏராளமான பணிகளை செய்துள்ளனர். கல்வி, அறிவியல், மருத்துவம், வணிகள், கல்வியில் முக்கிய பங்காற்றியுள்ளனர். ராணுவத்தில் பணியாற்றிய இந்திய வம்சாவளியினருக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். மக்கள் வீட்டில், தீபாவளி கொண்டாடவது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்து மதத்தினர் கொண்டாடும் முக்கிய பண்டிகை தீபாவளி. அமைதி மற்றும் நம்பிக்கைக்கான புது வருடத்தில், உலகம் முழுதும் 100 கோடி இந்துக்களும், அமெரிக்காவில் 20 லட்சம் இந்துக்களும் தீபாவளி கொண்டாடுகின்றனர். உலகம் முழுதும், புத்த மதத்தினர். சீக்கியர்கள், ஜெயின் சமூகத்தினரும், கொண்டாடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.