வெற்றிகரமாக நடந்தேறிய வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவையின் மாநாடு 2018

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவையின் மாநாடு 2018, அண்மையில் ஜூன் 29, 30, ஜூலை 1 ஆகிய தினங்களில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் டல்லாஸ் நகரில் 5000க்கும் மேற்பட்ட தமிழர்கள் மண்டப வளாகத்தில் கூடியிருக்க, மிகவும் சிறப்பாக நடைப் பெற்றது. இந்த விழாவினை மெட்ரோ ப்ளக்ஸ் தமிழ்ச் சங்கம் தலைமை ஏற்று 500 தன்னார்வத் தொண்டர்களின் உழைப்பில் மிகவும் நேர்த்தியாக ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டு விழா நடத்தியது பாராட்டதக்கது.

100க்கும் மேற்பட்ட இயல் இசை நாடக நிகழ்ச்சிகள், தொழில் முனைவோர் பட்டறைகள், தமிழ் கருத்தரங்குள், கருத்துக்களம் நிகழ்ச்சி, சிறுவர்களுக்கான மற்றும் இளைஞர்களுக்கான போட்டிகள், பட்டறைகள், இயல் இசை நாடகம் ஆய்வுகள் என பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் ஜூன் 29, 30, ஜூலை 1 ஆகிய மூன்று நாட்கள் விமர்சையாக நடந்தது.

மெட்ரோ ப்ளக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் 50க்கும் மேற்பட்ட தன்னார்வாளர்கள் கிட்டதட்ட 6 மாதம் உழைப்பில் உருவான தஞ்சை பெரிய கோவிலின் மாதிரி மாநாட்டின் முதல் சிறப்பு எனலாம்.
150க்கும் மேலான தமிழ் இலக்கியவாதிகள், திரைப்பட, நாடக கலைஞர்கள், தொழில் அதிபர்கள் என உலகின் பல தேசங்களில் வந்திருந்து இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள். வட அமெரிக்காவில் தமிழர்களின் வரலாற்றை பறைசாற்றும் முதன்மையான விழா இந்த மாநாடு என்றால் அது மிகையாகாது. விழா குழுவின் தலைவர் கால்டுவெல் வேல்நம்பி அவர்களை விழா நாயகன் என்பதே சரி. கனடா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அமைப்பின் நிறுவனர்கள் திரு. வள்ளிக்கண்ணன் மருதப்பன், திருமதி.பார்வதி வள்ளிக்கண்ணன் மற்றும் அவர்களது மகள் சிறுமி.ஹரிணி வள்ளிக்கண்ணன் கனடா டொரண்டோ நகரில் இருந்து அமெரிக்கா டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் நகருக்கு சென்று இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள். மேலும், கனடிய தமிழர் பேரவையின் சார்பில் திரு.சிவா வேலுப்பிள்ளை, திருமதி.சிவமணி சிவா மற்றும் திரு.சன் மாஸ்டர் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.