வி.இஸட்.துரை இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் சுந்தர்.சி

வி.இஸட்.துரை இயக்கும் புதிய படத்தில், ஹீரோவாக நடிக்கிறார் சுந்தர்.சி.

சுந்தர்.சி நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘முத்தின கத்தரிக்கா’. வெங்கட் ராகவன் இயக்கிய இந்தப் படத்தில், பூனம் பாஜ்வா ஹீரோயினாக நடித்தார். சதீஷ், விடிவி கணேஷ், சிங்கம்புலி, சுமித்ரா, யோகிபாபு, ரவி மரியா, ஸ்ரீமன், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். சித்தார்த் விபின் இசையமைத்த இந்தப் படத்தை, குஷ்புவின் ‘அவ்னி மூவிஸ்’ நிறுவனம் தயாரித்தது.

துருவ் விக்ரமின் ஜோடியாக அறிமுகமாகும் மேகா 2016-ம் ஆண்டு இந்தப் படம் ரிலீஸானது. அதன்பிறகு வரலாற்றுப் படமான ‘சங்கமித்ரா’வை இயக்கும் வேலைகளில் மும்முரமானார் சுந்தர்.சி. ஆர்யா, ஜெயம் ரவி, ஸ்ருதி ஹாசன் நடிப்பதாக இருந்த இந்தப் படத்தை, ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது. கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘சங்கமித்ரா’வின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

ஆனால், ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸுக்கு ஏற்பட்ட நிதிப் பிரச்சினை காரணமாக, ‘சங்கமித்ரா’ தொடங்குவது தாமதமானது. எனவே, ‘கலகலப்பு 2’ படத்தை இயக்கினார் சுந்தர்.சி. அதன்பிறகாவது ‘சங்கமித்ரா’ தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது என்று கூட சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்நிலையில், ஹீரோவாக நடிக்கப் போகிறார் சுந்தர்.சி. இந்தப் படத்தை வி.இஸட்.துரை இயக்குகிறார். இரண்டு ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இதற்காக ஊட்டியில் மிகப்பெரிய போலீஸ் ஸ்டேஷன் செட் அமைக்கப்பட்டு வருகிறது. இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

“சினிமா மேஜிக்னு சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது” – கவுதம் கார்த்திக் பேட்டி