- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

விஷால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது ஏன்?- தேர்தல் ஆணையம் விளக்கம்
ஆர்.கே.நகரில் போட்டியிடுவதாக இருந்த விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 11.15 மணியளவில் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இது தொடர்பாக ஆ.கே.நகரின் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி இரண்டு பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
விஷால் கிருஷ்ணாவின் வேட்புமனுவை நாங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டோம். அவரது வேட்புமனுவை 10 பேர் முன்மொழிந்திருந்தனர். அதில் சுமதி, அதை தீபன் ஆகியோர் விஷாலை பரிந்துரைத்து முன்மொழிந்தனரா என்பதில் சலசலப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக வேட்புமனு பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர், விஷாலின் வேட்புமனுவை முன்மொழிந்த சுமதி, தீபன் ஆகியோர் வேட்புமனுவில் இருப்பது தங்கள் கையெழுத்து இல்லை என நேரில் தெரிவித்தனர்.
மாலையில் சில ஆடியோ ஆதாரங்களை என்னிடம் விஷால் வழங்கினார். அதில், சுமதி என்பவர் யாரோ சிலரின் அழுத்தத்தின் பேரிலேயே தேர்தல் அதிகாரி முன் ஆஜராகி அவ்வாறு கூறியதாக பதிவாகியிருந்தது.
இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்தோம். சுமதியும், தீபனும் மீண்டும் ஆஜராகினர். விஷாலின் வேட்புமனுவை முன்மொழிந்த சுமதி, தீபன் ஆகியோர் வேட்புமனுவில் இருப்பது தங்கள் கையெழுத்து இல்லை எனத் தெரிவித்தனர்.
மேலும், விஷால் தரப்பில் ஆடியோ ஆதாரம் மட்டுமே வழங்கப்பட்டது. அதைவைத்து உண்மைத்தன்மையை உறுதி செய்ய முடியவில்லை. எனவேதான் வேட்புமனுவை நிராகரித்தோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.