- நடிகர் மிதுன் சக்ரவர்த்தி கோல்கட்டாவில் மாநில தலைவர் திலீப் கோஷ் தலைமையில் பா.ஜ.,வில் இணைந்தார்
- நாங்க ஆட்சிக்கு வந்தால் ரௌடியிசமே இருக்கது : தி மு க ஸ்டாலின் தமாஷ் !!
- 142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்
- இலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் !!
- கிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா?

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு: மெரினாவில் இளைஞர்கள் கைது
சென்னை மெரினாவில் இளைஞர்கள் கடலில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டவினர். தடையை மீறி போராடிய இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
மெரினா கடற்கரையில் மதியம் 1.30 மணியளவில் இளைஞர்கள் சிலர் விவசாயிகளுக்கு ஆதரவாக பதாகைகளுடன் கடலில் இறங்கி போராடத் தொடங்கினர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் இளைஞர்களை கடற்கரைக்கு அழைத்துவரும் முடற்சியில் ஈடுபட்டனர்.
சில இளைஞர்களை போலீஸார் கைது செய்த நிலையில் 5 மாணவர்கள் மட்டும் கடலில் இறங்கி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போலீஸாரும் கடலில் இறங்கிச் சென்று அந்த மாணவர்களை அழைத்து வந்தனர். மாணவர்கள் அனைவரும் கைது செய்யபட்டனர்.
எங்கள் உயிர் பெரிதல்ல:
“டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடுகிறோம். விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். எங்களுக்கு உணவு அளித்து உயிர் வளர்க்கும் விவசாயிகளின் உயிர்தான் முக்கியம். எங்கள் உயிர் பெரிதல்ல” என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவர் கூறினார்.
‘தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்காதே’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் மாணவர்கள் ஏந்தியிருந்தனர். அதேபோல், நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தையும் மத்திய அரசு கைவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
கைது செய்யப்பட்டு அழைத்துச் சென்றபோது செய்தியாளர்களிடம் பேசிய இளைஞர்கள், “எங்கள் உயிர் பெரிதல்ல. விவசாயிகளுக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராகிவிட்டோம். எங்கள் போராட்டம் தொடரும்” என்றார்.